கார்த்திகை தீபம்: சாமுண்டீஸ்வரியின் இதய அறுவை சிகிச்சையை வைத்து ஸ்ரேயா போடும் புது சதி!

By Yathrika Nov 17, 2026 03:30 AM GMT
Report

கார்த்திகை தீபம்

Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான தொடர் 'கார்த்திகை தீபம்'. இந்த சீரியலில் அடுத்தடுத்து பல அதிரடியான திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில், இன்றைய எபிசோடில் ஸ்ரேயா போடப்போகும் புதிய சதித்திட்டம் குறித்த பரபரப்பான காட்சிகள் இடம்பெற உள்ளன.

சாமுண்டீஸ்வரி வீட்டுக்கு வரும் ஸ்ரேயா:

[

கடந்த எபிசோடில் சாமுண்டீஸ்வரி வீட்டுக்குத் திரும்பி வருவதாகச் சொல்லியிருந்த ஸ்ரேயா, இப்போது தினேஷுடன் வீட்டுக்கு வருகிறார். ஆனால், வீட்டுக்குள் செல்லாமல் வாசலிலேயே தயங்கி நிற்கிறார்.

இதைப் பார்த்த தினேஷ், ஏன் தயங்குகிறாய் என்று கேட்டு அவரை உள்ளே அழைக்கிறார். அதற்கு ஸ்ரேயா, உள்ளே வருவதற்கு கொஞ்சம் சங்கடமாக இருப்பதாகச் சொல்கிறார். 

இதையடுத்து தினேஷ் மட்டும் வீட்டுக்குள் சென்று சுவாதி உள்ளிட்ட குடும்பத்தினரைச் சந்திக்கிறார். அப்போது சுவாதி, அக்கா எங்கே என்று கேட்க, அவர் வெளியே தயங்கி நிற்பதாக தினேஷ் சொல்கிறார்.

உடனே வாசலுக்கு வரும் சாமுண்டீஸ்வரி, "பழைய விஷயங்களை எல்லாம் மனதில் வைத்துக்கொள்ளாதே. என் மீது எந்தத் தவறும் இல்லை என்பதைப் புரிந்துகொண்டுதானே வந்திருக்கிறாய். தாராளமாக உள்ளே வா" என்று ஸ்ரேயாவை அன்புடன் அழைக்கிறார்.

ஸ்ரேயா மீது கார்த்திக்கிற்கு வரும் சந்தேகம்:

ஸ்ரேயா வீட்டுக்குள் வந்த விஷயம் ரேவதி மூலமாக கார்த்திக்கிற்குத் தெரிய வருகிறது. இதைக் கேட்டதும் கார்த்திக் அதிர்ச்சியடைகிறார். மேலும், "அவர்கள் அவ்வளவு சீக்கிரம் பழைய விஷயங்களை மறந்துவிட்டு நல்லவர்களாக மாறிவிட மாட்டார்கள். இதற்குப் பின்னால் கண்டிப்பாக ஏதோ ஒரு பெரிய திட்டம் இருக்கும்" என்று ரேவதியிடம் தனது சந்தேகத்தைச் சொல்கிறார்.

சிவனாண்டியுடன் சேர்ந்து ஸ்ரேயா போடும் புதிய சதி:

கார்த்திக் சந்தேகப்படுவது போலவே, சாமுண்டீஸ்வரிக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை நடந்த விஷயத்தைத் தெரிந்துகொள்ளும் ஸ்ரேயா, அதை வைத்தே ஒரு பெரிய சதித்திட்டத்தைத் தீட்டுகிறார்.

இதுபற்றி சிவனாண்டியிடம் ஆலோசனை செய்யும் அவர், அடுத்ததாக சாமுண்டீஸ்வரிக்கு சிகிச்சை அளித்த மருத்துவரை நேரில் சந்திக்கச் செல்கிறார்.

அந்த மருத்துவரிடம் பேசும் ஸ்ரேயா, "நான் யுகேவில் பெரிய தொழிலதிபராக இருக்கிறேன். சாமுண்டீஸ்வரி என்னுடைய நெருங்கிய தோழி. நீங்கள் புதிதாக ஒரு மருத்துவமனை கட்டத் திட்டமிட்டிருப்பதாகக் கேள்விப்பட்டேன். அதற்குத் தேவையான நவீன மருத்துவ உபகரணங்கள் அனைத்தையும் நான் யுகேவில் இருந்து வாங்கித் தருகிறேன். ஆனால், அதற்குப் பதிலாக நான் சொல்கிற ஒரு விஷயத்தை நீங்கள் செய்து தர வேண்டும்" என்று ஒரு பேரத்தையே பேசுகிறார்.

கார்த்திக்கிற்கு கிடைக்கும் முக்கியமான தகவல்:

இதற்கிடையில், மருத்துவமனையில் ஸ்ரேயாவும் மருத்துவரும் ரகசியமாகப் பேசிக்கொண்டிருப்பதை கார்த்திக்கிற்குத் தெரிந்த ஒரு நர்ஸ் கவனித்துவிடுகிறார். உடனே கார்த்திக்கிற்கு போன் செய்து, சிவனாண்டியின் ஆட்களும் ஸ்ரேயாவும் மருத்துவமனைக்கு வந்து மருத்துவரைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருக்கும் விஷயத்தைத் தெரிவிக்கிறார்.‘

இதைக் கேட்ட கார்த்திக் அடுத்து என்ன செய்யப்போகிறார்? ஸ்ரேயா மருத்துவரிடம் என்ன உதவி கேட்டார்? இதய மாற்று அறுவை சிகிச்சையை வைத்து அவர் போடும் சதியால் சாமுண்டீஸ்வரியின் உயிருக்கு ஏதாவது ஆபத்து வருமா? நர்ஸ் கொடுத்த தகவலை வைத்து கார்த்திக் ஸ்ரேயாவின் திட்டத்தை முறியடிப்பாரா? என்பதைத் தெரிந்துகொள்ள இன்றைய 'கார்த்திகை தீபம்' எபிசோடைத் தவறாமல் பாருங்கள்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US