கார்த்திகை தீபம் எபிசோட் அப்டேட்: சாமுண்டீஸ்வரிக்கு பேஸ்மேக்கர் பொருத்திய ஸ்ரேயா... அடுத்ததாக போடும் அதிர்ச்சி திட்டம்!
கார்த்திகை தீபம்
Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான தொடர் கார்த்திகை தீபம்.
இந்தத் தொடரில் அடுத்தடுத்து பல அதிர்ச்சியான திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் இன்றைய எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதைப் பார்க்கலாம்.
ஸ்ரேயாவின் சதித் திட்டம்!
கடந்த எபிசோடில் சாமுண்டீஸ்வரியின் உடல்நிலை குறித்து மருத்துவரிடம் ஸ்ரேயா ரகசியமாகப் பேசியிருந்தார். அதன் தொடர்ச்சியாக, சாமுண்டீஸ்வரியின் இதயத்தில் பேஸ்மேக்கர் கருவியைப் பொருத்த வேண்டும் என்று அவரிடம் சொல்லும்படி மருத்துவரிடம் ஸ்ரேயா கூறுகிறார்.

இதற்கு மருத்துவரும் முதலில் தயங்க, அவருக்கு ஒரு பெரிய ஆசை வார்த்தையைக் கொடுக்கிறார் ஸ்ரேயா. அதாவது, மருத்துவர் புதிதாகத் தொடங்கப்போகும் மருத்துவமனைக்குத் தேவையான நவீன மருத்துவ உபகரணங்களை லண்டனில் இருந்து குறைந்த விலைக்கு வாங்கிக் கொடுப்பதாகச் சொல்கிறார். இதனால் மருத்துவரும் ஸ்ரேயாவின் திட்டத்துக்கு சம்மதிக்கிறார்.
கார்த்திக்கைச் சந்திக்கும் ரேவதி!
இதற்கிடையில், வீட்டில் கார்த்திக்கைச் சந்திக்கும் ரேவதி அவருடன் கொஞ்ச நேரம் ரொமான்டிக்காகப் பேசிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார். மறுபக்கம், வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக சாமுண்டீஸ்வரி மருத்துவமனைக்குச் செல்கிறார்.
பேஸ்மேக்கர் பற்றி விளக்கும் சிவனாண்டி!
சாமுண்டீஸ்வரி மருத்துவமனைக்குச் சென்றிருக்கும் நேரத்தில், சிவனாண்டியும் சந்திரகலாவும் இதைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது பேஸ்மேக்கர் என்றால் என்ன, அது இதயத்தில் எப்படி வேலை செய்யும் என்பது குறித்து சந்திரகலாவுக்கு சிவனாண்டி விளக்கிச் சொல்கிறார்.
சாமுண்டீஸ்வரிக்கு அவசர அறுவை சிகிச்சை!
மருத்துவமனையில் சாமுண்டீஸ்வரியைப் பரிசோதிக்கும் மருத்துவர், ஸ்ரேயா சொல்லிக் கொடுத்தபடியே நடிக்கிறார். உங்களுடைய இதயம் மிகவும் பலவீனமாக இருக்கிறது. உடனடியாக அறுவை சிகிச்சை செய்து பேஸ்மேக்கர் பொருத்த வேண்டும்.
இல்லையென்றால் உயிருக்கு ஆபத்து என்று சொல்லி அவரைப் பயமுறுத்துகிறார். இதைக் கேட்டதும் சாமுண்டீஸ்வரி அதிர்ச்சியடைந்து, வேறு வழியில்லாமல் உடனடியாக அறுவை சிகிச்சைக்குச் சம்மதிக்கிறார். இந்த விஷயம் கார்த்திக்கிற்கும் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால், கார்த்திக் மருத்துவமனைக்கு வந்து சேருவதற்குள் சாமுண்டீஸ்வரிக்கு அறுவை சிகிச்சை முடிந்து பேஸ்மேக்கர் கருவியும் பொருத்தப்பட்டுவிடுகிறது. கார்த்திக் மருத்துவமனைக்கு வந்து பார்த்தபோது, எல்லாமே முடிந்துவிட்டது. இனிமேல் எதுவும் செய்ய முடியாது என்ற நிலை உருவாகிறது.
ஸ்ரேயாவின் அடுத்த பகீர் திட்டம்!
சாமுண்டீஸ்வரிக்கு பேஸ்மேக்கர் பொருத்தப்பட்ட விஷயம் சிவனாண்டி, சந்திரகலா மற்றும் ஸ்ரேயாவுக்குத் தெரிய வருகிறது.
இதனால் சந்தோஷமடையும் ஸ்ரேயா, நம்முடைய முதல் திட்டம் வெற்றிகரமாக முடிந்துவிட்டது என்று கூறுகிறார். அதோடு நிற்காமல், அடுத்ததாக தனக்குத் தெரிந்த பீட்டர் என்பவன் வருவான் என்றும், அவன் மூலமாக இந்த பேஸ்மேக்கர் கருவியைச் செயலிழக்கச் செய்து சாமுண்டீஸ்வரியின் கதையை முடித்து விடலாம் என்றும் அடுத்த அதிர்ச்சித் திட்டத்தைச் சொல்கிறார்.
சாமுண்டீஸ்வரியின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த ஸ்ரேயா போடும் இந்தத் திட்டத்தை கார்த்திக் எப்படி முறியடிக்கப் போகிறார்? பீட்டர் வந்த பிறகு என்னென்ன விபரீதங்கள் நடக்கப்போகிறது? என்பதை அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.