கார்த்திகை தீபம்: சிறைக்குச் சென்ற சாமுண்டீஸ்வரி.. லண்டனுக்குத் தப்பிச் செல்லத் திட்டம் போடும் ஸ்ரேயா!

By Yathrika Nov 27, 2026 05:43 AM GMT
Report

கார்த்திகை தீபம்

Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் ‘கார்த்திகை தீபம்’. அடுத்தடுத்து பல அதிரடி திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் இந்தத் தொடரில், வெள்ளிக்கிழமை (27-ம் தேதி) எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதைப் பார்க்கலாம்.

நீதிபதியிடம் சரணடைந்த சாமுண்டீஸ்வரி – 15 நாட்கள் சிறைக்காவல்!

ஸ்ரேயாவை சுட்டுக் கொன்ற வழக்கில், சாமுண்டீஸ்வரி இரவோடு இரவாக நீதிபதியின் வீட்டுக்குச் சென்று சரணடைகிறார். அவராகவே முன்வந்து சரணடைந்ததோடு, அவரது உடல்நிலையையும் கருத்தில் கொண்டு மருத்துவக் கண்காணிப்புடன் 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிடுகிறார்.

கார்த்திகை தீபம்: சிறைக்குச் சென்ற சாமுண்டீஸ்வரி.. லண்டனுக்குத் தப்பிச் செல்லத் திட்டம் போடும் ஸ்ரேயா! | Zee Tamizh Karthigai Deepam Serial Latest Episode

இந்த விஷயத்தை வெளியே வந்ததும் அனைவரிடமும் சாமுண்டீஸ்வரி சொல்ல, போலீசார் அவரைக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்கின்றனர்.

தினேஷுக்கு காத்திருந்த அதிர்ச்சி – போலி சடலத்தை எரித்த சந்திரகலா, சிவனாண்டி!

மறுபக்கம், மொரீஷியஸுக்குச் சுற்றுலா சென்றிருக்கும் தினேஷுக்கு கார்த்திக் போன் செய்கிறார். அப்போது ஸ்ரேயா இறந்துவிட்டதாகச் சொல்லி, உடனடியாக ஊருக்குத் திரும்பும்படி கூறுகிறார். இதைக் கேட்டு அதிர்ச்சியடையும் தினேஷ், கார்த்திக் ஏற்பாடு செய்து கொடுக்கும் டிக்கெட் மூலம் உடனே கிளம்பத் தயாராகிறார்.

இதற்கிடையில், ஸ்ரேயா உண்மையிலேயே இறந்துவிட்டதாக போலீசாரும் மற்றவர்களும் நம்ப வேண்டும் என்பதற்காக சந்திரகலாவும் சிவனாண்டியும் சேர்ந்து ஒரு நாடகம் ஆடுகின்றனர். ஸ்ரேயாவின் போலி சடலத்தை எரித்து, அவர் இறந்துவிட்டதை உறுதி செய்யும் முயற்சியில் இறங்குகின்றனர்.

சிறையில் சாமுண்டீஸ்வரி – லண்டனுக்குத் தப்பிக்க ஸ்ரேயா போட்ட திட்டம்!

இதற்கிடையில், ஸ்ரேயா இறந்துவிட்டதையும் சாமுண்டீஸ்வரி சிறைக்குச் சென்றுவிட்டதையும் பாட்டியிடம் கார்த்திக் சொல்கிறார். இதனால், "ஒன்றன் பின் ஒன்றாகப் பிரச்சனைகள் வந்துகொண்டே இருக்கிறதே" என்று பாட்டி மிகவும் வருத்தப்படுகிறார்.

தொடர்ந்து, ரேவதி, ரோகிணி உள்ளிட்ட குடும்பத்தினர் சிறைக்குச் சென்று சாமுண்டீஸ்வரியைப் பார்த்துக் கண்கலங்குகின்றனர். ஆனால், சாமுண்டீஸ்வரியோ, "யாரும் கவலைப்படாதீங்க, எல்லாத்தையும் பார்த்துக்கலாம்" என்று சொல்லி அவர்களுக்கு ஆறுதல் கூறுகிறார்.

மறுபக்கம், உயிருடன் இருக்கும் ஸ்ரேயா தனது அடுத்தகட்ட திட்டத்தைப் பற்றி யோசிக்கிறார். "இந்தியாவைப் பொறுத்தவரைக்கும் நான் இறந்துட்டேன். இனிமே உடனே லண்டனுக்குப் போயிட்டா, சாமுண்டீஸ்வரியால் சிறையை விட்டு வெளியே வரவே முடியாது" என்று சொல்லி, நாட்டை விட்டுத் தப்பிச் செல்லத் திட்டம் போடுகிறார்.

வீட்டுக்குள் வராமல் வாசலிலேயே நின்ற கார்த்திக் – குடும்பத்தினர் மீது பாசம்!

சாமுண்டீஸ்வரி சிறைக்குச் சென்றதால் வீட்டில் இருக்கும் அனைவரும் சாப்பிடாமல் சோகமாக அமர்ந்திருக்கின்றனர். அப்போது அனைவருக்கும் சாப்பாடு எடுத்துக்கொண்டு கார்த்திக் அங்கு வருகிறார்.

ரேவதி அவரை வீட்டுக்குள் வரச் சொல்லியும் கார்த்திக் மறுத்துவிடுகிறார். "இப்போ நான் வீட்டுக்குள்ள வந்தா, என்னை உள்ளே விடக்கூடாதுன்னு அத்தை போலீஸ் பாதுகாப்பு போட்டிருக்கிற விஷயம் எல்லோருக்கும் தெரிஞ்சிடும்.

அதனால் அத்தைக்குத்தான் கெட்ட பெயர் வரும். நான் இன்னொரு நாள் வரேன். முதல்ல நீங்க எல்லாரும் சாப்பிடுங்க" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார். இப்படி ஒருபக்கம் சாமுண்டீஸ்வரி சிறையில் இருக்க, இன்னொரு பக்கம் ஸ்ரேயா லண்டனுக்குத் தப்பிச் செல்லத் திட்டம் போடுகிறார்.

ஸ்ரேயா உயிருடன் இருக்கும் உண்மையை கார்த்திக் எப்போது கண்டுபிடிப்பார்? சாமுண்டீஸ்வரியை இந்தப் பிரச்சனையில் இருந்து எப்படி மீட்டெடுப்பார்? என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US