ஜீ தமிழ் கார்த்திகை தீபம் சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஸ்பெஷல் நியூஸ்... என்ன தெரியுமா?
ஜீ தமிழ்
சன் மற்றும் விஜய் டிவியை தாண்டி ஜீ தமிழ் சீரியல்கள் மக்களின் பெரிய வரவேற்பை பெற்று வருகின்றன. நாளுக்கு நாள் இந்த தொலைக்காட்சி டிஆர்பி அதிகரித்துக் கொண்டே வருகிறது.
அப்படி ஜீ தமிழில் கார்த்திகை தீபம், கெட்டி மேளம், அண்ணா, பாரிஜாதம் போன்ற தொடர்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது.

ஸ்பெஷல் எபிசோட்
கார்த்திகை தீபம் சீரியல் முதல் எபிசோட் கடந்த 2022ம் ஆண்டு ஜீ தமிழில் தொடங்கப்பட்டது.
முதல் சீசனிற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்த நேரத்தில் திடீரென முடிக்கப்பட்டது.

அதே வேகத்தில் புதிய கதைக்களத்துடன், சில நடிகர்கள் மாற்றத்துடன் 2வது சீசன் தொடங்கப்பட்டது. இந்த 2 சீசன்களை சேர்த்து இதுவரை 1021 எபிசோடுகள் ஒளிபரப்பாகி உள்ளது.
தற்போது இந்த வார கார்த்திகை தீபம் சீரியல் ரசிகர்களுக்கு ஒரு ஸ்பெஷல் தகவல் வந்துள்ளது. அதாவது கும்பாபிஷேக எபிசோட் இந்த வார ஞாயிற்றுக்கிழமை 2 மணி நேர ஸ்பெஷல் எபிசோடாக ஒளிபரப்பாக உள்ளதாம்.
வரும் நவம்பர் 16ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி முதல் ஒளிபரப்பாக உள்ளதாம்.
அதற்கான புரொமோ இதோ,