ஜீ தமிழில் ஒளிபரப்பான கில்லாடி ஜோடிஸ் டைட்டில் வின்னர் யார் தெரியுமா?
ஜீ தமிழ்
ஜீ தமிழ், தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களின் பேராதரவை கொண்ட தொலைக்காட்சிகளில் ஒன்றாகும். இந்த தொலைக்காட்சியில் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் என மக்களின் வரவேற்பை பெற்று வருகின்றன.
சீரியல்களை தாண்டி ரசிகர்கள் கொண்டாடும் ரியாலிட்டி ஷோ என்றால் அது கில்லாடி ஜோடிஸ் நிகழ்ச்சி தான்.

வின்னர்
கடந்த ஜனவரி 25ம் தேதி தொடங்கப்பட்ட இந்த கில்லாடி ஜோடிஸ் நிகழ்ச்சி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இரவு 8.30 மணி முதல் 10.30 மணி வரை ஒளிபரப்பானது.
இதில் மக்களிடம் மிகவும் பிரபலமான பிரபல ஜோடிகள் கலந்துகொண்டனர். மொத்தம் 8 ஜோடிகளுடன் தொடங்கப்பட்ட இந்த போட்டியில் தனிப்பட்ட காரணங்களுக்காக குரு மற்றும் டாரியா ஜோடி பாதியிலேயே வெளியேறினார்கள்.
இதைத் தொடர்ந்து யோகேஷ் & நந்தினி, ஐஸ்வர்யா & கிருஷ், அமர் & காயத்ரி, சங்கவி & ராணவ், ஸ்வாதிகா & நரேஷ், தங்கப்பாண்டி & சாந்தினி மற்றும் பிரியா ஜெர்சன் & சார்லி ஜாய் ஆகிய 7 ஜோடிகள் இறுதிப்போட்டியில் மோதினார்கள்.
சஞ்சீவ் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சி இப்போது பைனல் நிகழ்ச்சியை எட்டிவிட்டது.

இந்த கில்லாடி ஜோடிஸ் டைட்டிலை அமர் & காயத்ரி ஜோடி வென்றுள்ளனர். கடும் போட்டிக்கு பிறகு நந்தினி & யோகேஷ் ஜோடி இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளனர்.
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan