அடுத்து பிரம்மாண்ட ரியாலிட்டி ஷோவை தொடங்கிய ஜீ தமிழ்.. அர்ச்சனா தொகுப்பாளினி, நடுவர்கள் யார் யார்?
பிரம்மாண்டத்தின் உச்சமாக ஜீ தமிழில் ரியாலிட்டி ஷோக்கள் அதிகம் கலக்கி வருகிறது.
நாளுக்கு நாள் ரியாலிட்டி ஷோக்களின் பார்வையாளர்கள் உயர தொலைக்காட்சி இந்த ஷோக்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன் சரிகமப சிறுவர்களுக்கான சீசன் முடிவுக்கு வந்தது. நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு திவினேஷ் வெற்றியாளர் என அறிவித்தார்.
புதிய சீசன்
சரிகமப நிகழ்ச்சிக்கு மக்களிடம் ஆதரவு அதிகம் பெறுகியுள்ளதாம் ஜீ தமிழ் உடனே பெரியவர்களுக்கான சீசனை தொடங்கிவிட்டனர். வரும் மே 24ம் தேதி முதல் சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் 7 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாம்.
வழக்கம் போல் அர்ச்சனா தொகுப்பாளினியாக கலக்க ஸ்ரீநிவாஸ், ஸ்வேதா, கார்த்திக் மற்றும் விஜய் பிரகாஷ் இந்த புதிய சீசனின் நடுவர்களாக களமிறங்கியுள்ளனர்.
இந்த அறிவிப்பை ஜீ தமிழ் தொலைக்காட்சியே தங்களது இன்ஸ்டாவில் அறிவித்துள்ளனர்.