நீண்ட வருடங்களாக ஓடிக் கொண்டிருந்த நினைத்தாலே இனிக்கும் சீரியல் முடிந்தது... கடைசி காட்சி இதோ
நினைத்தாலே இனிக்கும்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஹிட் தொடர்களில் ஒன்று நினைத்தாலே இனிக்கும்.
கடந்த ஆகஸ்ட் 2021ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த 4 வருடங்களுக்கு மேலாக வெற்றியாக ஒளிபரப்பாகி இருக்கிறது. இதில் ஸ்வாதி சர்மா, ஆனந்த் செல்வன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இதில் நாயகி ஸ்வாதியின் அழுத்தமான நடிப்பு தொடருக்கான ஒரு ப்ளஸ் என்றே கூறலாம், இவர் இந்த தொடரில் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்.
பெங்காலி மொழியில் மிதாய் என்ற பெயரில் ஒளிபரப்பாகிய தொடரின் ரீமேக் தான் நினைத்தாலே இனிக்கும்.
கிளைமேக்ஸ்
வெற்றிகரமாக 1000 எபிசோடுகளுக்கு மேல் ஒளிபரப்பாகிய இந்த சீரியல் முடிவுக்கு வரப்போவதாக நாம் ஏற்கெனவே அறிவித்தோம்.
இந்த நிலையில் 1417 எபிசோடுகளுடன் இந்த சீரியல் தற்போது முடிந்துள்ளது. கடைசியாக நாள் இறுதி காட்சியின் புகைப்படம் இதோ,