ஜீ தமிழில் புதிய சீரியல் என்ட்ரி, மேலும் ஒரு புதிய சீரியலின் நேரம் மாற்றம்...
ஜீ தமிழ்
ஜீ தமிழ், நாளுக்கு நாள் ரசிகர்கள் கூட்டத்தை அதிகம் பெற்றுவரும் தொலைக்காட்சி.
சன் டிவி-விஜய் டிவிகளை தாண்டி இந்த தொலைக்காட்சி புத்தம் புதிய சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் மூலம் மக்களை கவர்ந்திழுத்து வருகிறார்கள்.
புதிய நேரம்
கடந்த சில வாரங்களாக ஜீ தமிழ் சீரியல்கள் குறித்து நிறைய செய்திகள் வெளிவருகின்றன. பழைய சீரியல்கள் முடிவதும், புத்தம் புதிய சீரியல்கள் களமிறங்குவதுமாக உள்ளது.
நவம்பர் 3, இன்று முதல் திருமாங்கல்யம் என்ற புத்தம் புதிய சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. ஒரு கதாநாயகன், இரு கதாநாயகிகளை கொண்ட தொடராக உள்ளது.

புரொமோவை பார்க்கும் போதே இது எப்படிபட்ட தொடர் என்பது நன்றாக தெரியும். புதுவரலாம் பழைய சீரியல்களின் நேரம் மாற்றப்பட்ட நிலையில் இன்னொரு சீரியலின் நேரம் மாற்றத்திற்கான தகவலும் வந்துள்ளது.
அதாவது சலங்கை ஒலி சீரியல் திங்கள் முதல் சனி வரை மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாம். இனி 1.5 மணி நேரம் சலங்கை ஒலி சீரியல் ஒளிபரப்பாக உள்ளதாம்.