பார்வதியை கண்டதும் கொந்தளித்த அரசி... கையில் போட்டோவுடன் வந்து ஷாக் கொடுத்த அண்ணன்! சாமந்தியில் இன்று பரபரப்பு

By Yathrika Aug 05, 2026 07:00 AM GMT
Report

சாமந்தி சீரியல்

தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களின் பேராதரவை பெற்று வரும் சாமந்தி சீரியல், Zee தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

நேற்றைய எபிசோடில் அர்ஜுனுக்கு பானிபூரி சாப்பிட வைத்து வித்தியாசமான தண்டனை கொடுத்த அரசி, இன்று இன்னும் பெரிய அதிரடிக்கு தயாராக இருக்கிறார்.

வீட்டில் நடக்கவுள்ள பிரமாண்ட நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், எதிர்பாராத விதமாக அரசியின் அண்ணன் கோடீஸ்வரன் தனது குடும்பத்துடன் வீட்டிற்கு வருகிறார்.

பார்வதியை கண்டதும் கொந்தளித்த அரசி... கையில் போட்டோவுடன் வந்து ஷாக் கொடுத்த அண்ணன்! சாமந்தியில் இன்று பரபரப்பு | Zee Tamizh Samanthi Serial Episode

அவரைப் பார்த்ததும் அரசி அதிர்ச்சியில் உறைந்து போக, "இவ்வளவு பெரிய நிகழ்ச்சி வீட்டில் நடக்குது... எங்களை மட்டும் கூப்பிடலையா?" என்று கேள்வி எழுப்பும் கோடீஸ்வரன், தனது கையில் இருந்த மர்ம போட்டோவை காட்டி அரசிக்கு இன்னொரு ஷாக்கை கொடுக்கிறார்.

இதற்கிடையில், கோடீஸ்வரன் வந்திருப்பதை அறிந்த பாட்டியும் மகேந்திரனும் கடும் கோபமடைகிறார்கள். வீட்டிற்குள் புதிய பதற்றம் உருவாகும் சூழல் ஏற்படுகிறது.

மற்றொரு பக்கம், கோர்ட் சூட்டில் கம்பீரமாக ரெடியாகி வரும் மகேந்திரனை பார்த்து ஆச்சரியப்படும் சாமந்தியிடம், "தோட்டக்காரனுக்கு எதுக்கு கோர்ட் சூட்டுனு பாக்குறியா?" என்று வழக்கம்போல் நக்கலாக பேசுகிறார்.

பார்வதியை கண்டதும் கொந்தளித்த அரசி... கையில் போட்டோவுடன் வந்து ஷாக் கொடுத்த அண்ணன்! சாமந்தியில் இன்று பரபரப்பு | Zee Tamizh Samanthi Serial Episode

அதே சமயம், பழைய புடவையிலேயே இருக்கும் பார்வதியை பார்த்த சாமந்தி, புதிய புடவை அணியச் சொல்லி அனுப்புகிறாள். அழகாக ரெடியாகி வரும் பார்வதியை பார்த்து, "இப்போதான் ரொம்ப அழகா இருக்கீங்க" என்று அன்புடன் திருஷ்டி கூட எடுக்கிறாள்.

ஆனால் அடுத்த நொடியே யாரும் எதிர்பார்க்காத சம்பவம் நடக்கிறது. அரசிக்கு ஜூஸ் கொண்டு சென்ற பார்வதியின் புடவையை பார்த்ததும் ஆத்திரம் அடையும் அரசி, "இந்த புடவையை கட்டச் சொன்னது யார்?" என்று சத்தமிட்டு, ஜூஸை நேராக அவள் மீது ஊற்றுகிறாள்.

பார்வதியை கண்டதும் கொந்தளித்த அரசி... கையில் போட்டோவுடன் வந்து ஷாக் கொடுத்த அண்ணன்! சாமந்தியில் இன்று பரபரப்பு | Zee Tamizh Samanthi Serial Episode

திடீர் அவமானத்தில் அதிர்ச்சி அடையும் பார்வதி, கண்ணீர் மல்க தனது அறைக்குச் சென்று மீண்டும் பழைய புடவையையே அணிகிறாள். அரசியின் இந்த கோபத்திற்குப் பின்னால் என்ன காரணம்? கோடீஸ்வரன் காட்டிய போட்டோ எந்த ரகசியத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வரப்போகிறது?

பார்வதியின் வாழ்க்கையில் அடுத்ததாக என்ன நடக்கப்போகிறது? இந்த பரபரப்பான திருப்பங்களை காண தவறாதீர்கள்... சாமந்தி, தினமும் இரவு 8 மணிக்கு, உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில்! 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US