ஜீ தமிழின் சந்தியா ராகம் சீரியலில் மாற்றப்பட்ட நடிகர்... புது நாயகன் யார் தெரியுமா?
சந்தியா ராகம்
திங்கள் முதல் சனி வரை இரவு 9.30 மணிக்கு ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சீரியல் சந்தியா ராகம்.
கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் துவங்கப்பட்ட இந்த தொடரில் சந்தியா, ராஜீவ் பரமேஸ்வர், அந்தாரா, லஸ்யா, சுர்ஜித், குரு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
சுமார் 300 எபிசோடுகளை கடந்து இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. ரசிகர்களின் பேராதரவை பெற்றுவரும் இந்த தொடர் அக்கா தங்கைகளின் பாசத்தை பேசும் கதையாக உள்ளது.
மாறிய நடிகர்
இதில் சீனு என்ற கதாபாத்திரத்தில் சுர்ஜித் என்பவர் நடித்துவந்த நிலையில் அவர் சீரியலில் இருந்து கடந்த மாதம் வெளியேறினார். இதனால் கதையில் அவர் வெளியூர் சென்றிருப்பதாக சொல்லி எபிசோடுகளை ஒளிபரப்புகிறார்கள்.
தற்போது சீனு கதாபாத்திரத்தில் மனோஜ் பிரவு என்பவர் நடிக்க உள்ளாராம். இவர் இதற்கு முன்பாக யூ டியூப் தொடர்களில் நடித்துள்ளாராம்.