சந்தோஷத்தின் உச்சத்தில் சரிகமப சீசன் 5 போட்டியாளர் பவித்ரா... என்ன விஷயம் தெரியுமா?
பாடல் நிகழ்ச்சி
தமிழ் சின்னத்திரையில் பாடல்களை ரசிக்கும் ரசிகர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்த நிகழ்ச்சிகள் தான் சூப்பர் சிங்கர் மற்றும் சரிகமப சீசன்.
விஜய் டிவியில் சூப்பர் சிங்கரும், ஜீ தமிழில் சரிகமப பாடல் நிகழ்ச்சிகளும் மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.
சூப்பர் சிங்கர் 11வது சீசன் பைனலை நெருங்கி வருகிறது, அதேபோல் ஜீ தமிழில் சரிகமப சீசன் 5 முடிவடைந்து இப்போது ஜுனியர்களுக்கான நிகழ்ச்சி ஆரம்பமாகி வெற்றிகரமாக நடந்து வருகிறது.

பவித்ரா
ஜீ தமிழில் சரிகமப சீசன் 5 நிகழ்ச்சியில் பங்குபெற்ற ஒரு போட்டியாளருக்கு இப்போது சினிமாவில் அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.
முதலில் டி.இமான் இசையமைப்பில் உருவாகும் புதிய படத்தில் வரும் பாடலை பாட பவித்ராவிற்கு வாய்ப்பு கிடைத்ததாக அவரே இன்ஸ்டாவில் பதிவிட்டார்.
தற்போது இன்னொரு புதிய படத்தில் பாடும் வாய்ப்பு பவித்ராவிற்கு கிடைத்துள்ளது, அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவிட ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.