திடீரென முடிவுக்கு வரும் ஜீ தமிழின் சூப்பர் ஹிட் சீரியல்- எந்த தொடர் தெரியுமா?
ஜீ தமிழ்
தமிழ் சின்னத்திரை பொறுத்தவரையில் மிகவும் ஹிட்டாக அதாவது மக்களிடம் அதிகம் வரவேற்பு பெற்ற தொலைக்காட்சிகள் என்றால் அது சன், விஜய் மற்றும் ஜீ தமிழ் தான்.
முக்கிய இடத்தில் சன் மற்றும் விஜய் மாறி மாறி வரும், ஆனால் ஜீ தமிழ் இந்த தொலைக்காட்சிகளின் அடுத்த இடத்திலேயே இருக்கும். இப்போது இதில் புத்தம் புதிய தொடர்கள், நிகழ்ச்சிகள் என வர ரசிகர்களால் அதிகம் ஜீ தமிழ் கொண்டாடப்படுகிறது.
முடிவுக்கு வரும் தொடர்
கடந்த சில வருடங்களில் ஜீ தமிழில் நிறைய பழைய தொடர்கள் முடிவுக்கு வர புத்தம் புதிய தொடர்கள் அதிகம் வந்தன. இந்த தொலைக்காட்சியில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட தொடர்களின் ஒன்று ஒரு ஊர்ல ரெண்டு ராஜகுமாரி.
தற்போது இந்த தொடர் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி வந்துள்ளது. அது என்னவென்றால் இந்த தொடரின் கிளைமேக்ஸ் விரைவில் வர இருக்கிறதாம், இதைக்கேட்ட ரசிகர்கள் என்ன இதற்குள் முடிகிறதா என கமெண்ட் செய்கிறார்கள்.