வெற்றிகரமாக முடிவடைந்த ஜீ தமிழின் சிங்கிள் பசங்க ஷோ... வெற்றியாளர் யார் தெரியுமா?
ஜீ தமிழ்
தமிழ் சின்னத்திரையில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் தொலைக்காட்சிகளில் ஒன்று சன் மற்றும் விஜய் முக்கிய பங்கு வகிக்கிறது.
இவர்களை தாண்டி அடுத்து ஜீ தமிழ் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கார்த்திகை தீபம், அண்ணா, கெட்டி மேளம், இதயம் என பல தொடர்கள் ரசிகர்களின் பேராதரவை பெற்று வருகிறது.

ரியாலிட்டி ஷோ
சீரியல்களை தாண்டி ரியாலிட்டி ஷோக்களுக்கும் நல்ல ரெஸ்பான்ஸ் தான்.
சரிகமப என்ற பாடல் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் கொடுக்கும் ஆதரவு குறித்து நமக்கே தெரியும். தற்போது சரிகமப ஷோவின் ஜுனியர்களுக்கான 5வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து சிங்கிள் பசங்க என்ற ரியாலிட்டி ஷோவிற்கும் ரசிகர்கள் பெரும் ஆதரவு கொடுத்து வந்தார்கள். தற்போது அந்த ஷோவும் முடிவுக்கு வந்துவிட்டது. சிங்கிள் பசங்க நிகழ்ச்சியின் டைட்டிலை தங்கபாண்டி தட்டிச்சென்றார், ரன்னர் அப்பாக ராவண ராம் ஜெயித்துள்ளார்.