விபத்தில் சிக்கிய கார்.. பள்ளத்தில் விழுந்த திவ்யா.. உயிருக்கு போராடும் நாயகி! திருமாங்கல்யம் இன்றைய எபிசோட் அப்டேட்
திருமாங்கல்யம்
தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் மனதை கவர்ந்து வரும் 'திருமாங்கல்யம்' சீரியல், Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
விறுவிறுப்பும் அதிரடியும் கலந்த இந்த தொடரில், நேற்றைய எபிசோடில் திரு, திவ்யா மற்றும் மகா பயணம் செய்த கார் பிரேக் செயலிழந்து கட்டுப்பாட்டை இழந்த நிலையில், இன்று உயிரைப் பதறவைக்கும் சம்பவங்கள் அரங்கேற உள்ளன. காரின் பிரேக் வேலை செய்யாததால் நிலைமை மோசமாக இருப்பதை உணர்ந்த திரு, திவ்யாவையும் மகாவையும் உடனே காரில் இருந்து குதிக்கச் சொல்கிறான்.

ஆனால் மகா, "அக்காவை விட்டுட்டு நான் வர மாட்டேன்" என்று உறுதியாக மறுக்கிறாள். அதேபோல் திவ்யாவும், "உன்னை விட்டுட்டு நானும் போக மாட்டேன்" என்று சொல்ல, என்ன செய்வது என்று தெரியாமல் திரு தவிக்கிறான். பரபரப்பான அந்த தருணத்தில், வேகமாக சென்ற கார் ஒரு பெரிய மரத்தில் மோதி நின்றுவிடுகிறது. சில நிமிடங்களுக்கு பிறகு மயக்கத்தில் இருந்த திருவும் மகாவும் கண் விழிக்கின்றனர்.
ஆனால் காருக்குள் திவ்யா இல்லாததை பார்த்ததும் இருவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். பதறிப்போன அவர்கள் அருகிலிருந்த பள்ளத்தாக்கு பகுதியில் இறங்கி, இரண்டு திசைகளில் திவ்யாவை தேட ஆரம்பிக்கின்றனர். நெஞ்சை பதறவைக்கும் தேடலுக்கு பிறகு, பள்ளத்தின் கீழே சுயநினைவின்றி கிடக்கும் திவ்யாவை கண்டுபிடிக்கின்றனர்.
திவ்யாவின் நிலையை பார்த்து திருவும் மகாவும் கலங்கிப் போகின்றனர். அந்த நேரத்தில் அங்கு விறகு சுமந்து வந்த ஒரு பாட்டி உதவிக்கரம் நீட்டுகிறார். திவ்யாவின் நாடித்துடிப்பை பரிசோதித்த அவர், இன்னும் உயிருடன் இருப்பதாகவும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றால் காப்பாற்ற முடியும் என்றும் கூறுகிறார்.
இதையடுத்து அனைவரும் சேர்ந்து போராடி திவ்யாவை பள்ளத்திலிருந்து மேலே தூக்கி வருகின்றனர். அப்போது அருகில் கிடைத்த தள்ளுவண்டியில் திவ்யாவை படுக்க வைத்து, மிகுந்த சிரமத்துடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர்.
அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் திவ்யா அனுமதிக்கப்பட, மருத்துவர்கள் தீவிர சிகிச்சையை தொடங்குகின்றனர். மருத்துவமனை வாசலில் கண்ணீர் மல்க நின்ற திரு, "எப்படியாவது திவ்யாவை காப்பாத்திடுங்க" என்று மருத்துவர்களிடம் கெஞ்சுகிறான்.
தனது காதலியின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதை நினைத்து அவன் கதறி அழும் காட்சிகள் ரசிகர்களை உருக்க வைக்க உள்ளன.
திவ்யா உயிர் பிழைப்பாரா? இந்த விபத்துக்கு பின்னால் இருக்கும் சதியை அறிவார்களா? திவ்யாவின் நிலை திருவின் வாழ்க்கையை எப்படி மாற்றப் போகிறது? என்ற பல பரபரப்பான கேள்விகளுக்கு பதில் கிடைக்க, திருமாங்கல்யம் தொடரின் இன்றைய எபிசோடை தவறாமல் காணுங்கள்!