பூஜையில் மயங்கி விழுந்த மகா, அலேக்காக தூக்கி திரு.. வீட்டார் கொடுத்த சர்ப்ரைஸ் - திருமாங்கல்யம் இன்றைய எபிசோட் அப்டேட்
திருமாங்கல்யம்
தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சி திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் திருமாங்கல்யம்.
கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் திரு திவ்யா சேர வேண்டும் என மலை கோவிலில் பூஜை செய்ய மகா கிளம்பி வந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது மகா கோவிலுக்கு வந்திருக்கும் விஷயம் அறிந்து அம்பிகா திருவை அழைத்துக் கொண்டு கோவிலுக்கு வருகிறார்.

கோவிலில் மகா ஒவ்வொரு படிக்கட்டுக்கும் பூஜை செய்து கொண்டு மேலே செல்ல கோவிலுக்கு வந்த திரு வேகவேகமாக படியேறி வருகிறான். அம்பிகா 1000 படி ஏற முடியாமல் தவிக்கிறார்.
பிறகு திரு வரும் சமயத்தில் மகாவுக்கு மயக்கம் வந்து கீழே விழும் அவளை தாங்கி பிடித்து அலேக்காக தூக்கிக்கொண்டு கீழே வருகிறான். மகாவுக்கு தண்ணீர் தெளித்து அவளை இயல்பு நிலைக்கு கொண்டு வருகின்றனர். அம்பிகா எதுக்காக இப்படி பண்ண என்று கேட்க திரு சாரும் திவ்யா அக்காவும் ஒன்று சேரனும்னு தான் இப்படி செய்ததாக சொல்கிறாள்.
மறுபக்கம் திவ்யா பெங்களூர் கிளம்பி கொண்டு இருக்க தாத்தா போன் செய்து வீட்டுக்கு அழைக்க திவ்யா மறுக்கிறாள். மகாவின் பிறந்தநாள் என்று சொல்ல திவ்யா வருவதாக சொல்லி வீட்டுக்கு கிளம்பி வருகிறாள்.
பிறகு திவ்யாவை ஒரு ரூமில் காத்திருக்க சொல்கின்றனர். திரு வீட்டுக்கு வர அவனையும் அதே ரூமுக்கு அனுப்பி வைக்கின்றனர். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து நீ எதுக்கு இங்க வந்த நீ இருக்கேனு தெரிஞ்சிருந்தா இந்த ரூமுக்கு வந்திருக்கவே மாட்டேன் என வாக்குவாதம் செய்கின்றனர்.
இந்த சமயத்தில் டிவியில் கொடைக்கானலில் மகா டெடி பியர் வேஷம் போட்டுக் கொண்டு இவர்களுக்காக நடித்த வீடியோ சன் டிவியில் ப்ளே ஆகிறது.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப் போவது என்ன என்பது குறித்து அறிய திருமாங்கல்யம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
இந்திய மண்ணில் முதல் முறையாக இயங்கிய ஜப்பான் போர் விமானங்கள் - Veer Guardian 2026 பயிற்சி தொடக்கம் News Lankasri