திருமாங்கல்யம்: திரு, மகா ஜோடியைக் கலாய்த்த ஊர்க்காரர்கள்... கலகலப்பான தல தீபாவளி கொண்டாட்டத்தில்!

By Yathrika Nov 19, 2026 02:59 PM GMT
Report

திருமாங்கல்யம்

Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர் ‘திருமாங்கல்யம்’.

இந்தத் தொடரில் திருவும் மகாவும் தல தீபாவளிக்காக ஊருக்கு வந்துள்ள நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

சீர்வரிசை என்னவாக இருக்கும்?

சீர்வரிசையில் என்ன வரப்போகிறது என்ற குழப்பத்தில் திரு எல்லோரிடமும் கேட்டுக் கொண்டே இருக்கிறான்.

திருமாங்கல்யம்: திரு, மகா ஜோடியைக் கலாய்த்த ஊர்க்காரர்கள்... கலகலப்பான தல தீபாவளி கொண்டாட்டத்தில்! | Zee Tamizh Thirumangalyam Serial Latest Episode

ஆனால், யாருமே அதைச் சொல்லாமல் ரகசியமாக வைத்திருக்கின்றனர். குட்டியிடமும், பைரவனிடமும் இதைப் பற்றி விசாரிக்கிறான் திரு. அப்போது பைரவன் போன் செய்து, சீர்வரிசை வந்துவிட்டதாகச் சொல்கிறான். இதையடுத்து, பெரிய பில்டப்புடன் சீர்வரிசை கொண்டு வரப்படுகிறது.

கட்டிலைப் பார்த்து ஷாக் ஆன திரு!

சீர்வரிசையில் திருக்குமரன் - மகாலட்சுமி எனப் பெயர் பொறிக்கப்பட்ட பெரிய கட்டில் இருப்பதைப் பார்த்ததும் திரு அதிர்ச்சியடைகிறான். இதைப் பார்த்து, "இதைத்தான் நானே எடுத்துட்டு வர்றேன்னு சொன்னேனா?" எனத் திகைத்துப் போய் மகாவைப் பார்க்கிறான்.

திரு - மகா ஜோடியைக் கலாய்த்த ஊர்க்காரர்கள்!

அடுத்ததாக, கட்டில் எவ்வளவு உறுதியாக இருக்கிறது, அதன் அகலம் எப்படி இருக்கிறது என்று சோதித்துப் பார்க்க வேண்டும் என ஊர்க்காரர்கள் சொல்கின்றனர். இதற்காக திருவைக் கட்டிலில் உட்கார வைத்து, கை, கால்களை விரித்துப் படுத்துப் பார்க்கச் சொல்லி அவனை தர்மசங்கடத்தில் ஆழ்த்துகின்றனர்.

அதோடு நிறுத்தாமல், மகாலட்சுமியையும் திருவின் அருகில் உட்கார வைக்கின்றனர். "கட்டில் மகாலட்சுமியைப் போலவே அம்சமாக இருக்கு. சீக்கிரமே குழந்தையும் பிறந்துடும்" என அங்கிருப்பவர்கள், போலீஸ் உட்பட அனைவரும் சேர்ந்து திரு - மகா ஜோடியைக் கலாய்த்து சிரிக்கின்றனர்.

குடத்துக்குள் பொம்மை எடுக்கும் விளையாட்டு!

இதைத்தொடர்ந்து, அடுத்ததாக ஆண் குழந்தை பிறக்குமா, பெண் குழந்தை பிறக்குமா என்பதைத் தெரிந்துகொள்ளும் பாரம்பரிய விளையாட்டு நடக்கிறது. குடத்துக்குள் ஆண் குழந்தை, பெண் குழந்தை என இரண்டு பொம்மைகளைப் போட்டு எடுக்கச் சொல்கின்றனர்.

அப்போது பைரவன் ஆண் குழந்தை பொம்மையை எடுக்கச் சொல்ல, லலிதாவோ பெண் குழந்தை பொம்மையை எடுக்கச் சொல்கிறார். இதனால் திருவும் மஹாவும் குடத்துக்குள் கையை விடுவதற்கே தயங்குகின்றனர்.

அந்த நேரத்தில் ஊர்க்காரர் ஒருவர் குறும்புத்தனமாக ஊசியால் திருவைக் குத்த, அவன் பதற்றத்தில் இரண்டு பொம்மைகளையும் சேர்த்து எடுக்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய திருமாங்கல்யம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US