ஜீ தமிழின் திருமாங்கல்யம் சீரியல் ஒளிபரப்பாக தொடங்கும் தேதி எப்போது தெரியுமா?
ஜீ தமிழ்
ஜீ தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் ஒரு தொலைக்காட்சி.
இந்த டிவியில் கார்த்திகை தீபம், அண்ணா, கெட்டி மேளம் போன்ற தொடர்கள் டிஆர்பியில் டாப்பில் வந்துகொண்டு இருக்கிறது. அதேபோல் சரிகமப சீசன் 5, சிங்கிள் பசங்க போன்ற ரியாலிட்டி ஷோக்களுக்கு ரசிகர்கள் பேராதரவு கொடுத்து வருகிறார்கள்.

பழைய சீரியல்கள் முடிவதும், புதிய தொடர்கள் களமிறங்குவதுமாக உள்ளது.
புதிய சீரியல்
தற்போது விரைவில் ஒளிபரப்பாக போகும் புதிய சீரியலின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பே புதியதாக களமிறங்கப்போகும் திருமாங்கல்யம் சீரியல் புரொமோ வெளியாகி இருந்தது.
இப்போது என்ன தகவல் என்றால் வரும் நவம்பர் 3ம் தேதி இந்த புதிய சீரியல் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக இருப்பதாக தகவல் வந்துள்ளது.