மாலை முதல் இரவு வரை மாற்றப்பட்ட ஜீ தமிழ் சீரியல்களின் விவரம்... புதிய நேர விவரங்கள்
ஜீ தமிழ்
ஜீ தமிழ், தமிழ் சின்னத்திரையில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் தொலைக்காட்சிகளில் ஒன்று.
சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் இரண்டிலும் ஒன்றாக களமிறங்கி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்கள். கார்த்திகை தீபம், அண்ணா, கெட்டி மேளம், வீரா, அயலி போன்ற தொடர்களுக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் கூட்டம் அதிகமாகிக் கொண்டே தான் வருகிறது.
அதேபோல் ரியாலிட்டி ஷோக்களில் சரிகமப, டான்ஸ் ஜோடி டான்ஸ், சிங்கிள் பசங்க போன்றவைகளும் நல்ல ஹிட் தான்.

நேரம் மாற்றம்
கடந்த சில மாதங்களாக ஜீ தமிழில் சில தொடர்கள் முடிவுக்கு வருவதும், புதிய சீரியல்கள் களமிறங்குவதுமாக உள்ளது.
நினைத்தாலே இனிக்கும், மாரி என சில தொடர்கள் முடிவுக்கு வர திருமாங்கல்யம், அண்ணாமலை குடும்பம் என சில புதிய சீரியல்கள் களமிறங்குகிறது.
இதனால் மாலை முதல் இரவு வரை ஒளிபரப்பாகும் சீரியல்களின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதோ முழு விவரம்,