யார் அடுத்த சூப்பர் ஸ்டாராக வேண்டும்?- ஜீ தமிழின் அடுத்த சூப்பர் ஷோ, மக்களே ரெடியா?
முன்னணி தமிழ் ஜெனரல் என்டர்டெயின்மென்ட் சேனல்களில் ஒன்றான ஜீ தமிழ், அதன் தொடக்கத்திலிருந்தே மக்கள் விரும்பும் பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை நேயர்களுக்கு வழங்கி வருகிறது.
குறிப்பாக தமிழா தமிழா, ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ், டான்ஸ் ஜோடி டான்ஸ், சரிகமப, சத்யா, செம்பருத்தி, ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி போன்ற பல ஸ்வராஸ்யமான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பியுள்ளது.
ஆயிஷா, புவியரசு, ஷபானா ஷாஜஹான் மற்றும் அஷ்வினி ராதாகிருஷ்ணா போன்ற கலைஞர்கள் அன்றாட வீட்டுப் பெயர்களாக மாறவும் இது உதவியது. இப்போது, உங்கள் கனவுகளை வாழ ஜீ தமிழ் உங்களுக்கு வாய்ப்பளிக்கிறது!
18 - 45 வயதுக்குட்பட்ட அனைவரும் தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் நடைபெறும் இந்த மாபெரும் மெகா ஆடிஷனில் பங்கேற்கத் ஜீ தமிழ் அழைப்புவிடுக்கிறது.
தமிழகம் முழுவதும் உள்ள திறமையுள்ள ஆண், பெண் இரு பாலரும் வரவிருக்கும் ஜீ தமிழ் நிகழ்ச்சிகளில் முன்னணி நடிகர், நடிகையாகவோ, நகைச்சுவை நடிகர், தொகுப்பாளர் அல்லது துணை நடிகராகவோ இருப்பதற்கான வாய்ப்பு இந்த ஆடிஷன் ஒரு மேடையாக இருக்கும்.
ஜீ தமிழின் மிகப்பெரிய திறமை வேட்டையின் மூலம் அடுத்த பெரிய சூப்பர் ஸ்டாராக வேண்டும் என்ற உங்கள் கனவுகளுக்கு ஒரு படி மேலே செல்லுங்கள்.
சென்னையில் மே 29 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, காலை 9 மணி முதல் மயிலாப்பூரில் உள்ள சாந்தோம் ஹை ரோட்டில் உள்ள சாந்தோம் மேல்நிலைப் பள்ளியில் ஆன்-கிரவுண்ட் மெகா ஆடிஷன் நடக்கவிருக்கிறது.
டான் திரைப்படம் 14 நாட்களில் செய்த முழு வசூல்- மொத்தம் இத்தனை கோடி வசூலா?