கள்ள நோட்டு விவகாரத்தில் சிக்கிய ஜீவா.. வீட்டை விட்டு வெளியேற்றிய அப்பத்தா.. வாகை சூடவா சீரியல்
வாகை சூடவா
Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் வாகை சூடவா.
கடந்த எபிசோடில் கள்ள நோட்டு விவகாரத்தில் பணத்தை எடுத்தது ஜீவாதான் என்பது தெரியவந்த நிலையில், இன்றைய எபிசோடில் அதிரடி திருப்பங்கள் காத்திருக்கின்றன. உண்மை வெளிவந்ததைத் தொடர்ந்து ஆவேசமடையும் அப்பத்தா, ஜீவாவை வீட்டிற்குள் வரக் கூடாது என்று கூறி வெளியே அனுப்பிவிடுகிறார்.

இதனால் ஜீவா வீட்டிற்கு வெளியே தங்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. இதையடுத்து அப்பத்தாவும் தேவியும் வாசுதேவனுக்கு போன் செய்து, ஜீவாவை வீட்டிலிருந்து அனுப்பிவிட்டதாக தெரிவிக்கின்றனர். இதைக் கேட்டு மகிழ்ச்சியடையும் வாசுதேவன், இனி ஜீவாவும் மீனாட்சியும் நெருக்கமாகும் வாய்ப்பு இருக்காது என்று நினைத்து சந்தோஷப்படுகிறார்.
அதே நேரத்தில், தான் கேட்ட வைர மோதிரத்தை வாங்கித் தருமாறு தேவி கூற, ஜீவாவை முழுமையாக வீட்டை விட்டு வெளியேற்றினால் அதை வாங்கித் தருவதாக வாசுதேவன் உறுதியளிக்கிறார். இதன் பின்னர் மீனாட்சியையும் வீட்டிலிருந்து வெளியேற்ற திட்டம் தீட்டப்படுகிறது.

ஜீவா எடுத்த பணம் குறித்து மீனாட்சிக்கு தெரியாமல் இருக்க முடியாது என்று கூறி, குடும்பத்தினர் அவர்மீதும் சந்தேகத்தை திருப்ப முயல்கிறார்கள். ஆனால், இந்த விவகாரத்தில் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று மீனாட்சி தெளிவுபடுத்துகிறார். அப்போது மீனாட்சிக்கு ஆதரவாக தேன்மொழி பேச, அப்பத்தா மேலும் கோபமடைந்து, ஜீவா எடுத்த பணத்தை மீனாட்சியிடமே கொடுத்திருக்கலாம் என்று குற்றச்சாட்டு முன்வைக்கிறார்.
இந்த குற்றச்சாட்டால் வேதனையடையும் மீனாட்சி, இப்படி அவமானப்படுத்தப்படும் வீட்டில் தன்னால் இருக்க முடியாது என்று கூறுகிறார். அதற்கு அப்பத்தா, "பிடிக்கவில்லை என்றால் வீட்டை விட்டு வெளியே போ" என்று பதிலளித்து அதிர்ச்சி கொடுக்கிறார்.

மறுபுறம், வீட்டின் திண்ணையில் படுத்திருக்கும் ஜீவாவை அங்கிருந்தும் விரட்ட முயலும் தேவி, ஒரு வாளி தண்ணீரை அவன் மீது ஊற்றுகிறார். இதைப் பார்த்த கயல், ஜீவாவுக்கு ஆதரவாக பேசி சண்டை போடுகிறாள். பிறகு மீனாட்சி ஜீவாவிடம் கண்டிப்பா உனக்காக நீ பணத்தை எடுத்து இருக்க மாட்ட யாருக்காக எடுத்த அந்த உண்மையை சொல்லு என்று கேள்வி கேட்க ஜீவா சொல்ல மறுக்கிறான்.
ஜீவாவும் மீனாட்சியும் இந்த சிக்கலை எப்படி சமாளிக்கப் போகிறார்கள்? குடும்பத்தினரின் அடுத்த கட்ட திட்டம் என்ன? பரபரப்பான திருப்பங்களுடன் இன்றைய வாகை சூடவா எபிசோட் ஒளிபரப்பாக உள்ளது.