அப்பத்தாவுக்கு எதிராக ஒன்று கூடும் அம்மாக்கள், நடக்கப் போவது என்ன? - வாகை சூடவா இன்றைய எபிசோட் அப்டேட்
வாகை சூடவா
தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் வாகை சூடவா.
இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஜீவா மீனாட்சி நெருக்கத்தை பார்த்து ஆதி கடுப்பான நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, மனோ தேன்மொழியை நினைத்து வருத்தத்தில் இருக்கிறான்.

மேலும் தேன்மொழிக்கு எப்படி ஒரு நல்ல புருஷன் ஆக இருக்க வேண்டும் என நினைத்து பார்த்து வருந்துகிறான். மறுபக்கம் தேன்மொழியும் வருத்தமாக இருக்க மீனாட்சி அதை பார்த்துவிட்டு கண்டும் காணாமல் செல்ல தேன்மொழி எதுவுமே கேட்காம போற என்று கேட்க இது புருஷன் நெனச்சு வருத்தமா இருப்ப..
அதை எதுக்கு நான் கேட்கணும் உன்னை பிரிச்சு கூட்டிட்டு வந்தது நான் தானே என்று சொல்கிறாள். பிறகு மனோ தேன்மொழிக்கு போன் செய்ய மீனாட்சி போனை பிடுங்கி ஏதாச்சும் பேசுனா.. அவ்வளவு தான் என போன் வாங்கி மனோவிடம் கோபப்பட்டு பேசிவிட்டு வைத்து விடுகிறாள்.

அதன் பிறகு சக்தி மனோ வருத்தமாக இருப்பதை பார்த்து சுமதிக்கு போன் செய்து அப்பத்தாவுக்கு தெரியாம மனோவை நான் கோவிலுக்கு கூட்டிட்டு வரேன். நீங்கள் என் மீனாட்சிக்கு தெரியாமல் தேன்மொழியை கோவிலுக்கு கூட்டிட்டு வாங்க..
ரெண்டு பேரும் சந்திச்சு பேசி ஒரு முடிவு எடுக்கட்டும் என்று சொல்கிறாள்.
அங்கே சக்தி அப்பத்தாவுக்கு தெரியாமல் மனோவை அழைத்துக் கொண்டு கோவிலுக்கு கிளம்ப இங்கே சுமதி மீனாட்சியிடம் பொய் சொல்லி தடுமாற ஜீவா மீனாட்சி அழைத்துக் கொண்டு வெளியே சென்றுவிட சுமதி தேன்மொழி அழைத்துக்கொண்டு கோவிலுக்கு கிளம்புகிறார்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய வாகை சூடவா சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.