மனோவுக்கு வாக்கு கொடுத்த மீனாட்சி.. ஜீவாவுக்கு ஷாக் - வாகை சூடவா இன்றைய எபிசோட் அப்டேட்

By Yathrika Oct 01, 2026 05:50 AM GMT
Report

வாகை சூடவா

தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வர இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் வாகை சூடவா.

இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஜீவா அரியரை கிளியர் செய்யக்கூடாது, அவனை பாஸாக விடாமல் செய்ய வேண்டும் என அப்பத்தா முடிவெடுத்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

மனோவுக்கு வாக்கு கொடுத்த மீனாட்சி.. ஜீவாவுக்கு ஷாக் - வாகை சூடவா இன்றைய எபிசோட் அப்டேட் | Zee Tamizh Vaagai Sooda Vaa Serial Latest Episode

அதாவது, ஜீவா மீனாட்சிக்காக அரியரை கிளியர் செய்ய வேண்டும் என முடிவெடுக்கிறான். நான் அப்பத்தான் ஜீவாவை படிக்க விடாமல் செய்வதற்கான வேலைகள் அத்தனையும் செய்ய தொடங்குகிறார்.

மேலும் மனோ ஏற்கனவே துணி கடையை தொடங்குவதற்காக திட்டமிட்டு ஒரு கடையை பார்த்து வைத்திருக்க கடையின் உரிமையாளர் அட்வான்ஸ் கொடுக்கறீங்களா? இல்ல கடையை வாடகைக்கு வேறொருத்தர் கேக்குறாங்க கொடுத்து விடவா என்று விசாரிக்க மனோ இப்போதைக்கு கையில் பணம் இல்லை என்று சொல்கிறான்.

இதை கேட்ட மீனாட்சி ஏன் என்னாச்சு என்று கேட்க அந்த பணத்தை தான் அப்பத்தா கிட்ட கொடுத்துட்டோம் என்று சொல்ல உங்களுக்காக நான் பணத்தை ஏற்பாடு செய்கிறேன். நீங்க கடையை விட்டுடாதீங்க. ஒரு நாள் மட்டும் டைம் கொடுக்க என்று சொல்கிறாள்.

மனோவுக்கு வாக்கு கொடுத்த மீனாட்சி.. ஜீவாவுக்கு ஷாக் - வாகை சூடவா இன்றைய எபிசோட் அப்டேட் | Zee Tamizh Vaagai Sooda Vaa Serial Latest Episode

இதையடுத்து ஜீவா படித்துக் கொண்டிருக்க மீனாட்சி என்ன பண்ற? போதும் படுத்து தூங்கு என்று சொல்ல ஜீவா எப்படி ஆச்சு பாஸ் பண்ணி ஆகணும் என்று சொல்கிறான். மீனாட்சி இதை கேட்டு சந்தோஷம் அடைகிறாள்.

அடுத்த நாள் மீனாட்சி ஜீவாவை கோவிலுக்கு அழைத்துச் சென்று குங்குமம் வைத்து விடு என்று சொல்ல ஜீவா அதை கேட்டு மீனாட்சியா இப்படி சொல்றா என ஷாக் ஆகிறான்.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய வாகை சூடவா சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US