ஜீ தமிழின் புதிய சீரியலான வாகை சூடவா வா எப்போது ஆரம்பமாகிறது... விவரம் இதோ
ஜீ தமிழ்
சன் டிவி-விஜய் டிவி தாண்டி தமிழ் சின்னத்திரையில் மக்களால் கொண்டாடப்படும் ஒரு தொலைக்காட்சியாக உள்ளது ஜீ தமிழ்.
டிஆர்பி டாப் 10 இடத்தில் வரவில்லை என்றாலும் 11வது இடங்களுக்கு மேல் ஜீ தமிழின் சீரியல்கள் இடம்பெற்றுள்ளன. இவர்கள் ஒளிபரப்பும் சீரியல்களும் ஒரே மாதிரியான கதைக்களத்தை கொண்டு இல்லாமல் வித்தியாசமாக தான் இருக்கும்.

வாகை சூடவா
2026, புதிய வருடம் தொடங்கியதில் இருந்து எல்லா தொலைக்காட்சிகளும் புதிய பிளான்களில் உள்ளனர் என்பது நன்றாக தெரிகிறது.
அதாவது ஒரு தொலைக்காட்சி இல்லை சன்-விஜய்-ஜீ தமிழ் என 3 தொலைக்காட்சியும் புத்தம் புதிய சீரியல்களை ஒளிபரப்ப பிளான் போட்டு புரொமோக்களையும் ஒளிபரப்பி வருகிறார்கள்.
அப்படி ஜீ தமிழில் புதியதாக களமிறங்கப்போகும் சீரியல் தான் வாகை சூடவா, இர்பான் மற்றும் பவித்ரா முக்கிய ஜோடியாக நடிக்கும் இந்த சீரியல் வரும் ஜனவரி 26ம் தேதி முதல் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக இருப்பதாக கூறப்படுகிறது.