கேக் வெட்டி கொண்டாட்டத்தில் இறங்கிய ஜீ தமிழ் வீரா சீரியல் குழுவினர்... என்ன ஸ்பெஷல்
வீரா சீரியல்
ஜீ தமிழில் கடந்த 2024ம் ஆண்டு புதிய ஜோடியை மையப்படுத்தி தொடங்கப்பட்ட சீரியல் தான் வீரா.
வைஷ்ணவி மற்றும் அருண் ஜோடியாக நடிக்கும் இந்த சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் வட்டாரமே உள்ளது. இந்த ஜோடிக்கும் சமூக வலைதளங்களில் பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளார்கள்.
சில தினங்களுக்கு முன்பு வீரா சீரியல் நாயகி வைஷ்ணவியின் பிறந்தநாள் வந்தது, அவருடன் நடிக்கும் சக நடிகைகள் இரவு 12 மணிக்கு அவருக்கு சர்ப்ரைஸாக கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினார்கள்.

கொண்டாட்டம்
தற்போது வீரா சீரியல் குழுவினர் மீண்டும் ஒரு கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர், கேக் வெட்டியுள்ளனர்.
இதற்கு எதற்காக என்றால் வீரா சீரியல் ஒளிபரப்பாக தொடங்கி 700 எபிசோடுகளை எட்டிவிட்டதாம். அதற்காக தான் படப்பிடிப்பு தளத்தில் எல்லா நடிகர்களும் இருக்க கேக் வெட்டியுள்ளனர். இதோ போட்டோ,