ஜீ தமிழின் புதிய ரியாலிட்டி ஷோவில் அஜித் ரீல் மகள் ! அவரே சொன்ன பதில் உள்ளே..
பிரபல ஜீ தமிழ் தொலைக்காட்சி தற்போது பிக்பாஸ் போன்ற ரியாலிட்டி ஷோக்களுக்கு இணையாக சர்வைவர் என்ற ஒரு புதிய நிகழ்ச்சியை களமிறக்க உள்ளது.
சாகசங்கள் நிறைந்த அந்த நிகழ்ச்சியில் முக்கிய நட்சத்திரங்கள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர், மேலும் இந்நிகழ்ச்சியை ஆக்ஷன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்கவுள்ளார்.
இந்நிலையில் இதில் கலந்து கொள்ளும் நட்சத்திரங்கள் குறித்து பல பெயர்கள் அடிபட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது அஜித்தின் ரீல் மகளாக நடித்து பிரபலமான அனிகா இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவது குறித்து பேசியுள்ளார்.
ரசிகர் ஒருவர் அவரிடம் "நீங்கள் சர்வைவர் தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறீர்களா அல்லது வதந்தியா" என கேட்டுள்ளார். அதற்கு அனிகா "நான் கண்டிப்பாக சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை" என கூறியுள்ளார்.

தென்பெண்ணை ஆற்றில் நச்சு நுரை விவகாரம் - இரு மாநில அரசுகளுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் முக்கிய உத்தரவு IBC Tamilnadu