உதயநிதி தலைக்கு 10 கோடி.. சனாதனம் பற்றி பேசியதால் சாமியார் மிரட்டல்
சனாதனம் பற்றி உதயநிதி ஸ்டாலின் பேசி இருப்பது பற்றி பாஜக கட்சியை சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் உதயநிதி அவரது கருத்தில் உறுதியாக இருக்கிறார். இன்னும் கூட சனாதனம் பற்றி பேசுவேன் எனவும் அவர் பேட்டிகளில் கூறி வருகிறார்.
தலைக்கு 10 கோடி
இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலையை வெட்டிக் கொண்டு வருபவருக்கு ரூ.10 கோடி பரிசு தரப்படும் என உத்தர பிரதேச சாமியார் ஒருவர் கூறி மிரட்டல் இருக்கிறார்.
பரமஹன்ஸ ஆச்சார்யா என்ற அந்த சாமியார் உதயநிதி போட்டோவை வாளால் வெட்டி, தீயிட்டு கொளுத்தி இருக்கிறார். அந்த வீடியோவும் வைரல் ஆகி வருகிறது.
Sant Paramhans Acharya conducted a symbolic "behe@ding" using a sword, lit the poster and announced ₹10Cr on Minister Udhayanidhi Stalin's head for his remark on Sanatan Dharam!
— Mannu (@mannu_meha) September 4, 2023
The entire RW ecosystem has gone crazy & working hard to prove what Udhaynidhi said is right!? pic.twitter.com/gjyi6ak8S3