நடிகர் மோகன் பாபு வீட்டில் 10 லட்சம் கொள்ளை! திருடனை பிடித்த போலீசுக்கு காத்திருந்த அதிர்ச்சி
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் மோகன் பாபு. தெலுங்கு சினிமாவில் ஆதிக்கம் செலுத்தும் சில குடும்பங்களில் அவரது குடும்பமும் ஒன்று.
அவரது இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் லட்சுமி மஞ்சு ஆகியோரும் தெலுங்கு சினிமாவில் நடிகர்களாக இருந்து வருகின்றனர்.

பணம் திருட்டு
நடிகர் மோகன் பாபு ஐதராபாத்தின் ஜல்பள்ளி என்ற இடத்தில் இருக்கும் வீட்டில் வசித்து வருகிறார். அந்த வீட்டில் இருந்து சமீபத்தில் 10 லட்சம் ருபாய் காணாமல் போய்விட்டதாக போலீசுக்கு புகார் சென்று இருக்கிறது.
கடந்த செப்டம்பர் 22ம் தேதி மோகன் பாபுவின் உதவியாளர் வீட்டுக்கு வந்து இருந்த நிலையில், அவரிடம் இருந்த 10 லட்சம் ரூபாய் பணத்தை வீட்டின் வேலைக்காரன் திருடிக்கொண்டு எஸ்கேப் ஆனதாக புகாரில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
போலீசார் விசாரணை செய்து வேலைக்காரனை திருப்பதியில் கைது செய்து இருக்கின்றனர். அவனிடம் இருந்து 7.36 லட்சம் மட்டுமே திரும்ப கைப்பற்றப்பட்டு இருக்கிறது. மற்ற பணத்தை அவன் செலவழித்துவிட்டதாக கூறி இருக்கிறான்.
அவனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரூ.1.5 கோடி மதிப்பிலான குடியிருப்பு: பென்சிலால் துளையிட்ட நபர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி News Lankasri
பாகிஸ்தானில் இருந்து பாதியில் நாடு திரும்பும் 8 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்: ஒருநாள் தொடர் ரத்து? News Lankasri