100 கோடி ஷேர்.. 10 நாட்களில் எம்புரான் படம் உலகளவில் செய்துள்ள வசூல், இதோ
லூசிஃபர் 2
மோகன்லால் - பிரித்விராஜ் கூட்டணியில் 2019ம் ஆண்டு வெளிவந்து வெற்றியடைந்த திரைப்படம் லூசிஃபர். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ரசிகர்கள் அனைவரும் இரண்டாம் பாகத்திற்காக காத்திருந்தனர்.
அதன்படி, 6 ஆண்டுகள் கழித்து வெளிவந்த லூசிஃபர் 2 எம்புரான் வெளிவந்து மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் மஞ்சு வாரியர், டோவினோ தாமஸ், சுராஜ், அபிமன்யூ சிங், கேம் ஆஃப் த்ரோன்ஸ் புகழ் Jerome Flynn, சாய் குமார் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
10 நாள் வசூல் விவரம்
ரூ. 100 கோடிக்கும் மேல் ஷேர் கொடுத்து, மலையாள திரையுலகில் இதுவரை எந்த ஒரு படமும் செய்யாத வசூல் சாதனையை நிகழ்த்தியுள்ளது.
10 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் எம்புரான் படம் கடந்துள்ள நிலையில் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் 10 நாட்களில் ரூ. 245 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.