விடுதலை படம் இதுவரை தமிழகத்தில் மட்டும் இவ்வளவு வசூல் செய்துள்ளதா? செம மாஸ்
விடுதலை
சூரி முதல் முறையாக கதையின் நாயகனாக நடித்து கடந்த மாதம் 31ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் விடுதலை.
வெற்றிமாறன் இயக்கிய இப்படத்தில் விஜய் சேதுபதி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இரண்டு பாகங்களாக உருவான இப்படத்தில் முதல் பாகத்தில் விஜய் சேதுபதிக்கு பெரிதாக காட்சிகள் இல்லை. ஆனால், வந்த காட்சிகள் அனைத்திலும் மாஸ் காட்டிவிட்டார்.
ஆனால், இரண்டாம் பாகத்தில் முழுக்க முழுக்க விஜய் சேதுபதியின் ஆட்டம் இருக்கும் என தகவல் தெரிவிக்கின்றனர்.
இதனாலேயே விடுதலை இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
வசூல் விவரம்
இந்நிலையில், இப்படம் வெளிவந்த 11 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில் இதுவரை தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 33 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாம்.
மேலும் உலகளவில் ரூ. 40 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது.
இந்த புகைப்படத்தில் இருக்கும் முன்னணி நட்சத்திரம் யார் தெரியுமா.. இதோ பாருங்க

சொகுசு கார் முதல் பல ஆயிரம் டொலர் சம்பளம் வரை! போப் பிரான்சிஸ் செய்த நெகிழ்ச்சி செயல்கள் News Lankasri

கைவிடப்பட்ட குழந்தையை மீட்ட இளம்பெண்: பிரபல நடிகையின் சகோதரி குஷ்பூவுக்கு குவியும் பாராட்டுகள் News Lankasri
