12 Years Of Atlee: அட்லீ இயக்கிய ஐந்து சூப்பர்ஹிட் படங்களின் மொத்த வசூல் விவரம்..
அட்லீ
தமிழ் சினிமாவில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளிவந்த ராஜா ராணி படத்தின் மூலம் அனைவரிடமும் கவனத்தை பெற்றவர் அட்லீ. இதன்பின் முன்னணி ஹீரோவான தளபதி விஜய்யுடன் கைகோர்த்து தெறி எனும் வெற்றிப்படத்தை கொடுத்தார்.
இவர்களுடைய காம்போ மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற, மீண்டும் மெர்சல் படத்திற்காக இணைந்தனர். இப்படம் பல சர்ச்சைகளில் சிக்கினாலும் மக்களால் கொண்டாடப்பட்டு மாபெரும் வெற்றியடைந்தது.
தொடர்ந்து இரண்டு படங்கள் இந்த காம்போ ஹிட் கொடுத்த நிலையில், ஹாட்ரிக் ஹிட் அடிக்கவேண்டும் என பிகில் படத்தில் கூட்டணி அமைத்தனர். அதே போல் அப்படமும் பிளாக்பஸ்டர் ஹிட்டானது.
விஜய்யை வைத்து மூன்று ஹிட் படங்களை கொடுத்த அட்லீயை, அப்படியே பாலிவுட் பக்கம் அழைத்து சென்றார் ஷாருக்கான். பாலிவுட் திரையுலகில் பல திறமையான, மூத்த இயக்குநர்கள் இருந்தும், அட்லீதான் வேண்டும் என ஷாருக்கான் முடிவு செய்தார். இவர்களுடைய கூட்டணியில் ஜவான் எனும் படம் வெளியானது. உலகளவில் சக்கைப்போடு போட்டு பிளாக்பஸ்டர் ஹிட்டானது. தொடர்ந்து ஐந்து திரைப்படங்களையும் ஹிட் கொடுத்தார் இயக்குநர் அட்லீ.
12 Years Of அட்லீ
இந்த நிலையில், இயக்குநர் அட்லீ திரையுலகில் களமிறங்கி இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவு ஆகியுள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள். தங்களது வாழ்த்துகளையும் அட்லீக்கு தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், 12 ஆண்டுகளை சினிமாவில் நிறைவு செய்துள்ள இயக்குநர் அட்லீக்கு வாழ்த்துக்கள். மேலும் அவருடைய இயக்கத்தில் இதுவரை வெளிவந்த ஐந்து திரைப்படங்களின் வசூல் என்ன என்று பார்க்கலாம் வாங்க.
- ராஜா ராணி - ரூ. 50+ கோடி
- தெறி - ரூ. 150 கோடி
- மெர்சல் - ரூ. 250 கோடி
- பிகில் - ரூ. 295 கோடி
- ஜவான் - ரூ. 1250+ கோடி
தொடர் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக அட்லீ, அல்லு அர்ஜுனை வைத்து படம் இயக்கவுள்ளார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் தீபிகா படுகோன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.