13 Years of Thuppakki: பிளாக்பஸ்டர் துப்பாக்கி படத்தில் நடிக்க விஜய் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா
துப்பாக்கி
வருடாவருடம் நவம்பர் 13ஆம் தேதி வந்துவிட்டால், விஜய் ரசிகர்கள் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது துப்பாக்கி படம்தான். விஜய்யின் ஆக்ஷன் கம்பேக் என்றால் அது துப்பாக்கிதான்.

தொடர்ந்து பல தோல்வி படங்கள் வெளிவந்த நிலையில், காவலன், நண்பன் போன்ற படங்கள் விஜய் ரசிகர்களுக்கு ஆறுதலை கொடுத்தாலும், முழுமையான ஆக்ஷன் ஹீரோவாக விஜய் கம்பேக் கொடுக்க வேண்டும் என எதிர்பார்த்து காத்திருந்தனர். அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த படம் துப்பாக்கி. கம்பேக் என்றால் இதுதாண்டா மாஸ் கம்பேக் என திரையுலகிற்கு உதாரணமாக உள்ள சில படங்களில் துப்பாக்கியும் ஒன்று.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவான இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து காஜல் அகர்வால், வித்யுத் ஜாம்வல், ஜெயராம், சத்யன் ஆகியோர் நடித்திருந்தனர். மேலும் இப்படம் உலகளவில் ரூ. 129 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. விஜய்யின் திரை வாழ்க்கையில் முதல் ரூ. 100 கோடிக்கும் வசூல் செய்த படம் இதுவே ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் வாங்கிய சம்பளம்
இன்றுடன் துப்பாக்கி படம் வெளிவந்து 13 ஆண்டுகள் ஆகியுள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வரும் நிலையில், சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

துப்பாக்கி படத்தில் நடிப்பதற்காக விஜய் வாங்கிய சம்பளம் பற்றி தான் தகவல் தெரியவந்துள்ளது. அதன்படி, இப்படத்தில் நடிக்க தளபதி விஜய் ரூ. 15 கோடி சம்பளமாக வாங்கியிருக்கிறாராம்.