18 நாட்கள் முடிவில் விக்ரம் திரைப்படம் செய்துள்ள மொத்த வசூல் ! 400 கோடியை நெருங்கியதா?
விக்ரம் படத்தின் மொத்த வசூல்
உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் விக்ரம், இப்படம் தற்போது வரை உலகளவில் வசூலை வாரி குவித்து வருகிறது.
அதன்படி விக்ரம் திரைப்படம் கடந்த 5 வருடங்களாக தமிழகத்தில் அதிக வசூல் செய்த திரைப்படமாக திகழ்ந்து வந்த பாகுபலி பட வசூலை முறியடித்து, தற்போது ரூ.160 கோடிக்கும் மேல் வசூலை குவித்து NO.1 திரைப்படமாக திகழ்ந்து வருகிறது.
முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸில் சொதப்பி வந்த நிலையில் கமலின் விக்ரம் திரைப்படம் தான் அதனை உடைத்து 3 வாரங்களை கடந்தும் திரையரங்கில் வெற்றிகரமாக ஒடிக்கொண்டு இருக்கிறது.
இந்நிலையில் 18 நாட்கள் முடிவில் தற்போது விக்ரம் திரைப்படம் செய்துள்ள மொத்த வசூல் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி விக்ரம் திரைப்படம் இந்தியளவில் ரூ.265 கோடி, ஒவர் சீஸில் ரூ.115 கோடியை வசூல் செய்திருக்கிறது.
இதனிடையே மொத்தமாக விக்ரம் திரைப்படம் ரூ.380 கோடியளவில் வசூலை குவித்துள்ளது.
தனுஷின் நானே வருவேன் படத்தை இப்போதே விமர்சனம் செய்த தயாரிப்பாளர் தாணு !

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
