19 நாள் முடிவில் விஷ்ணு விஷாலின் கட்டா குஸ்தி 2 படம் செய்துள்ள மொத்த வசூல்...
கட்டா குஸ்தி 2
கடந்த ஜுலை 3ம் தேதி தமிழ் சினிமாவில் முதல் பாக வெற்றியை தொடர்ந்து 2வது பாகமாக வெளியான படம் தான் கட்டா குஸ்தி 2.
செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி, கருணாஸ், காளி வெங்கட், முனிஷ்காந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முதல் பாக மாபெரும் வெற்றியை தொடர்ந்து தயாரான இந்த 2வது பாகமும் சூப்பர் ஹிட் ஆனது.
படம் பெரிய அளவில் வசூல் செய்த மகிழ்ச்சியில் தயாரிப்பாளர் நடிகர் விஷ்ணு விஷாலுக்கு ஒரு BMW கார் பரிசாக வழங்கினார். மற்ற நடிகர்களுக்கு பரிசுகள் பல வழங்கினார்.

பாக்ஸ் ஆபிஸ்
ரிலீஸ் ஆகி 19 நாள் முடிவில் இப்படம் உலகளவில் ரூ. 56 கோடி வசூல் செய்துள்ளது.
இதன்மூலம் நடிகர் விஷ்ணு விஷாலின் திரைப்பயணத்திலேயே ரூ. 50 கோடிக்கு மேல் வசூலித்து முதல் திரைப்படம் என்ற பெறுமையை பெற்றுள்ளது கட்டா குஸ்தி 2.