பாக்ஸ் ஆபிஸ்: 2 நாட்களில் மீசைய முறுக்கு 2 திரைப்படம் செய்துள்ள வசூல்
2 Days Box office collection of Meesaiya murukku 2 Movie: ஹிப்ஹாப் ஆதி நடித்து, இயக்க, இசையமைத்துள்ள மீசைய முறுக்கு 2 திரைப்படம் வெளிவந்து 2 நாட்கள் ஆகியுள்ள நிலையில், இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த விவரம் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி பார்க்கலாம் வாங்க.
மீசைய முறுக்கு 2
தமிழ் சினிமாவிற்கு ஒரு இண்டிபெண்டென்ட் ஆர்ட்டிஸ்ட்டாக அறிமுகமான ஹிப்ஹாப் தமிழா ஆதி, இன்று இயக்குநர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முக திறமையுடன் முன்னணி நட்சத்திரமாக கலக்கிக்கொண்டிருக்கிறார்.

இவர் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியாகியுள்ள திரைப்படம் மீசைய முறுக்கு 2. இப்படத்தை அவ்னி மூவிஸ் மற்றும் பென்ஸ் மீடியா இணைந்து தயாரித்துள்ளன. இப்படத்தில் ரம்யா ரங்கநாதன், சைத்ரா அச்சர் மற்றும் கெத்திகா ஷர்மா என மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளனர். மேலும், ஹர்ஷத் கான், கருணாஸ், நாசர், பாபா பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பாக்ஸ் ஆபிஸ்
கடந்த 25-ஆம் தேதி திரைக்கு வந்த மீசைய முறுக்கு 2 திரைப்படம், நடிப்பு, இசை, கலகலப்பான காட்சிகள், எமோஷன்ஸ் என ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில், 2 நாட்களில் இப்படம் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 2 நாட்களில் மீசைய முறுக்கு 2 ரூ. 25 கோடி வசூல் செய்துள்ளது. இது இப்படத்திற்கு கிடைத்துள்ள மாபெரும் ஓப்பனிங் என்பது குறிப்பிடத்தக்கது.
