வெளிவந்து 2 ஆண்டுகளை கடந்த வெந்து தனித்து காடு படத்தின் மொத்த வசூல்! இத்தனை கோடியா
சிம்பு
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் சிம்பு. இவரை பல லட்சம் ரசிகர்கள் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார்கள்.
சிம்பு நடிப்பில் தற்போது தக் லைஃப் திரைப்படம் உருவாகி வருகிறது. முதல் முறையாக உலகநாயகன் கமல் ஹாசனுடன் இணைந்து சிம்பு நடித்து வருகிறார். மேலும் மணி ரத்னம் இப்படத்தை இயக்கி வருகிறார். பெரிதும் எதிர்பார்ப்பில் இப்படம் இருக்கிறது.
கவுதம் மேனன் - சிம்பு கூட்டணி என்றாலே அது ஹிட் தான். விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா, வெந்து தணிந்தது காடு என தொடர் வெற்றிப்படங்களை இந்த கூட்டணியில் கொடுத்துள்ளனர்.
வெந்து தணிந்தது காடு
இதில் கடைசியாக கடந்த 2022ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இப்படத்தை வேல்ஸ் நிறுவனம் ஐசரி கே கணேஷ் தயாரிக்க, ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். இப்படம் வெளிவந்து 2 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
இந்த நிலையில், வெந்து தணிந்தது காடு திரைப்படம் உலகளவில் செய்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் ரூ. 55 கோடி முதல் ரூ. 60 கோடி வரை வசூல் செய்திருக்கும் என சொல்லப்படுகிறது.

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
