வெளிவந்து இரண்டு வருடங்கள் ஆகும் விக்ரம் திரைப்படம்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா
#2YearsofVikram
லோகேஷ் கனகராஜ் உலகநாயகன் கமல் ஹாசனின் ரசிகர் என்று நம் அனைவருக்கும் தெரியும். அவரை பார்த்து தான் லோகேஷ் சினிமாவிற்கே வந்தார்.
அப்படி, தான் பார்த்த மிகப்பெரிய நட்சத்திரத்தை தானே இயக்கக்கூடிய வாய்ப்பை விக்ரம் திரைப்படத்தில் பெற்றார் லோகேஷ். ராஜ் கமல் நிறுவனம் தயாரிப்பில் உருவான இப்படம் கடந்த 2022ஆம் ஆண்டு பிரமாண்டமாக வெளிவந்தது.
இப்படத்தில் கமலுடன் இணைந்து பகத் பாசில், விஜய் சேதுபதி, காயத்ரி, செம்பன் வினோத் ஆகியோர் நடித்திருந்தனர். சூர்யா கடைசியாக கேமியோ ரோலில் வந்த படத்தை தூக்கி நிறுத்தினார். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
மக்களிடையே மாபெரும் வெற்றியடைந்த இப்படம் இன்றுடன் வெளிவந்து இரண்டு ஆண்டுகளை கடந்துள்ளது. இதனை #2YearsofVikram என்கிற Hashtag உடன் ரசிகர்கள் சமுக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.
பாக்ஸ் ஆபிஸ் வசூல்
இந்த நிலையில், விக்ரம் திரைப்படத்தின் வசூல் குறித்து பார்க்கலாம். உலகநாயகன் கமல் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான விக்ரம் திரைப்படம் உலகளவில் ரூ. 435 கோடி வரை வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்தது.
இதுவே கமல் ஹாசனின் திரை வாழ்க்கையில் அதிகம் வசூல் செய்த திரைப்படமாகும். உலகளவில் எப்படி புதிய வசூல் சாதனையை விக்ரம் படைத்ததோ, அதே போல் ரூ. 185 கோடி வரை வசூல் செய்து தமிழகத்திலும் வசூல் சாதனையை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Celebrating two amazing years of #Vikram! A film that set new standards in cinema. Kudos to the team and fans for this unforgettable journey #Ulaganayagan #KamalHaasan #OnceaKingAlwaysaKing#2YearsofVikram pic.twitter.com/zMra3iwxpu
— Raaj Kamal Films International (@RKFI) June 3, 2024