சூப்பர்ஸ்டார் சாதனை முறியடித்து இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்த மலையாள திரைப்படம்.. வசூல் எவ்வளவு தெரியுமா
மலையாள திரையுலகம்
மலையாளத்தில் சூப்பர்ஸ்டார் என அந்தஸ்தில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் மோகன்லால். இவர் நடிப்பில் கடந்த 2016ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் புலிமுருகன்.
இப்படம் தான் தற்போது வரை மலையாள திரையுலகில் அதிகம் வசூல் செய்த படம் என கருதப்பட்டது. ஆனால், தற்போது இந்த வசூல் முறியடிக்கப்பட்டுள்ளது. ஆம், சமீபத்தில் மலையாளத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்துள்ள திரைப்படம் தான் 2018.
இண்டஸ்ட்ரி ஹிட்
உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவான இப்படம் வெளிவந்து 17 நாட்கள் ஆகியுள்ள நிலையில் இதுவரை ரூ. 137 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
இதன்மூலம் புலிமுருகன் படத்தின் வசூல் சாதனையை முறியடித்து, மலையாள திரையுலகின் இண்டஸ்ட்ரி ஹிட் என அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் கண்டிப்பாக இப்படம் ரூ. 150 கோடியை கடந்து மேலும் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைக்கும் என தெரிவிக்கின்றனர்.
நடிகர் சரத்பாபு மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
