தீபாவளிக்கு வெளிவரும் திரைப்படங்கள்.. முழு லிஸ்ட் இதோ

Report

2023 தீபாவளி படங்கள்

தீபாவளி என்றாலே சினிமா ரசிகர்கள் அனைவரும், என்ன படம் அன்றைய நாளில் வெளிவருகிறது என ஆவலுடன் காத்துகொண்டு இருப்பார்கள்.

தீபாவளிக்கு வெளிவரும் திரைப்படங்கள்.. முழு லிஸ்ட் இதோ | 2023 Diwali Release Movies List

முன்னணி நடிகர்களின் படங்கள் சாதாரணமான நாட்களில் வெளிவந்தாலே அது அவர்களுடைய ரசிகர்களுக்கு தீபாவளி தான், தீபாவளி அன்றே வெளிவந்தால் அது எப்படி இருக்கும். அப்படி ரசிகர்கள் 2023 தீபாவளிக்கு வெளிவரவிருக்கும் திரைப்படங்கள் குறித்து தான் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம்.

லிஸ்ட் இதோ

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்

கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளிவந்த படம் ஜிகர்தண்டா. இப்படத்தின் இரண்டாம் பாகம் தான் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் தலைப்பில் வெளியாகிறது. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே. சூர்யா இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஜப்பான்

ராஜூ முருகன் இயக்கத்தில் முதல் முறையாக கார்த்தி நடித்துள்ள திரைப்படம் ஜப்பான். வழக்கமான தனது இயக்கத்தில் இருந்து சற்று மாறுபட்டு ஜப்பான் படத்தை ராஜு முருகன் இயக்கியுள்ளார் என டிரைலர் பார்க்கும்போது தெரிகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.

ரைடு

விக்ரம் மற்றும் ஸ்ரீ திவ்யா இணைந்து நடித்துள்ள படம் ரைடு. இப்படத்தை கார்த்தி இயக்கியுள்ளார். சமீபத்தில் வெளிவந்த இப்படத்தின் டிரைலர் மக்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தீபாவளிக்கு வெளிவரும் திரைப்படங்கள்.. முழு லிஸ்ட் இதோ | 2023 Diwali Release Movies List

மலேசியாவில் தோல்வியடைந்த லியோ.. இத்தனை கோடி நஷ்டமா

மலேசியாவில் தோல்வியடைந்த லியோ.. இத்தனை கோடி நஷ்டமா

தீ மார்வெல்ஸ்

ஹாலிவுட் திரையுலகில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விருப்பப்பட்டு பார்க்கும் படங்கள் என்றால் அது கண்டிப்பாக சூப்பர்ஹீரோ படங்கள் தான். அதிலும் மார்வெல் தயாரிப்பில் வரும் படங்களில் உலகளவில் பல கோடி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. இவர்களுடைய தயாரிப்பில் இருந்து நாளை வெளிவரும் திரைப்படம் தான் தீ மார்வெல்ஸ்.

டைகர் 3

பாலிவுட் கலக்கிய திரைப்படங்களில் ஒன்று டைகர். பார்ட் 1 மற்றும் பார்ட் 2 இரண்டுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து வருகிற 12ஆம் தேதி தீபாவளி அன்று டைகர் 3 படத்தை வெளியிடுகிறார்கள். இப்படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US