2023-ல் வெளியாகி முதல் நாளே அதிக வசூல் செய்த டாப் 3 இந்திய படங்களின் லிஸ்ட்!! இதோ
2023 -ம் ஆண்டு வெளியான படங்களில் அதிக வசூல் செய்த படங்கள் லிஸ்ட் தற்போது பார்க்கலாம் வாங்க.
லியோ
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான லியோ படம் அக்டோபர் 19-ஆம் தேதி வெளியானது.
இப்படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், மிஷ்கின், அர்ஜுன், கெளதம் மேனன், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான், ப்ரியா ஆனந்த், சாண்டி எனப் பிரபலங்கள் நடித்து இருந்தனர். இப்படம் வெளியான முதல் நாளே உலக அளவில் ரூ.148.5 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.
ஜவான்
ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளியான ஜவான் படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர். இப்படத்தில் ஹீரோயினாக நடிகை நயன்தாரா நடித்து இருந்தார். இந்த படம் வெளியாகி முதல் நாளே உலக அளவில் ரூ.129.6 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.
அனிமல்
ரன்பீர் கபூர் நடிப்பில் உருவான அனிமல் திரைப்படம் டிசம்பர் 1-ஆம் தேதி வெளிவந்தது. இந்த படத்தை சந்தீப் ரெட்டி வங்கா இயக்கி இருந்தார். இப்படம் வெளியான முதல் நாளே உலக அளவில் ரூ.116 கோடி வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu

நடிகை விஜயலட்சுமிக்கு 7 முறை கருக்கலைப்பு; பணம் பெற்ற சீமான் - வெளியான நீதிமன்றம் தீர்ப்பு IBC Tamilnadu
