படு வெற்றியடைந்த 3 BHK படத்தின் OTT ரிலீஸ் எப்போது... வெளிவந்த தகவல்
3 BHK
தமிழ் சினிமாவில் இந்த வருடம் வெளியான நிறைய படங்கள் தரமான கதைக்களத்துடன் வெளியாக மக்கள் மாபெரும் வரவேற்பு கொடுத்து வருகிறார்கள்.
அப்படி கடந்த ஜுலை 4ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 3 BHK. சரத்குமார், தேவயானி, சித்தார்த், மீதா ரகுநாத் உள்ளிட்டோர் நடிக்க, படத்துக்கு அம்ரித் ராம்நாத் இசையமைத்திருந்தார்.
சாந்தி டாக்கீஸ் தயாரித்த இந்த படம் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் வீடு வாங்கும் கனவில் இருக்க கடைசியில் வீடு வாங்கினார்களா இல்லையா என்பதே கதை.
ஓடிடி ரிலீஸ்
8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் படங்களை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இப்படத்தை இயக்கியுள்ளார்.
படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பு பெற்று பாக்ஸ் ஆபிஸ் சாதனை படைக்க வரும் ஆகஸ்ட் 4ம் தேதி இப்படம் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.