3 ஆண்டுகளை கடந்த அஜித்தின் வலிமை.. மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா
வலிமை
இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் இதுவரை மூன்று வெற்றிப்படங்கள் வெளிவந்துள்ளது. நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு.
இதில் போதை பொருளுக்கு அடிமையாகி, வழிதவறிப்போகும் இளைஞர்கள் குறித்து பேசிய திரைப்படம் வலிமை. ஆக்ஷன் கதைக்களத்தில் இப்படத்தில் மிரட்டியிருப்பார் அஜித். குறிப்பாக பைக் ஓட்டும் காட்சிகள் எல்லாம் செம மாஸாக இருக்கும்.
இப்படத்தில் அஜித்துடன் இணைந்து ஹுமா குரேஷி, கார்த்திகேயா, வைஷ்ணவி சைதன்யா, ராஜ் அய்யப்பா மற்றும் சுமித்ரா ஆகியோர் நடித்திருந்தனர். கடந்த 2022ம் ஆண்டு வெளிவந்த இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.
3 ஆண்டுகளை கடந்த வலிமை
இன்றுடன் வலிமை படம் வெளிவந்து மூன்று ஆண்டுகளை கடந்துள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.
இந்த நிலையில், மூன்று ஆண்டுகளை கடந்திருக்கும் அஜித்தின் வலிமை படம் உலகளவில் ரூ. 170 கோடிக்கும் மேல் பாக்ஸ் ஆபிஸில் வசூல் செய்துள்ளது. இதுவே இப்படத்தின் மொத்த வசூல் விவரம் ஆகும்.

உக்ரைன் தொடர்பில் ஐரோப்பாவின் இரட்டை நிலை... ரஷ்யாவுக்கு கொட்டிக்கொடுத்த பல பில்லியன் தொகை News Lankasri

கும்பத்தில் உதிக்கும் புதன்: வாழ்க்கையில் சிக்கலை சந்திக்கப்போகும் 2 ராசி உங்க ராசி இருக்கா? Manithan
