ரத்தம் தெறிக்க தெறிக்க வெளிவந்த நானியின் HIT 3 படத்தின் டீசர்.. இதோ
நானி
தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் நானி. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த சரிபோதா சனிவாரம் படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.
இதை தொடர்ந்து இவர் நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் திரைப்படம் HIT 3. இப்படத்தின் இரண்டு பாகங்கள் ஏற்கனவே வெளிவந்து சிறந்த வரவேற்பை பெற்றது.
இந்த படங்களை இதுவரை தயாரித்து வந்த நடிகர் நானி, மூன்றாவது பாகத்தில் அவரே ஹீரோவாக நடித்துள்ளனர். இன்வெஸ்டிகேஷன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தை சைலேஷ் இயக்கியுள்ளார். இப்படத்தில் நானியுடன் இணைந்து ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார்.
HIT 3 டீசர்
இந்த நிலையில், அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
இதோ அந்த டீசர்:
பெரிதும் எதிர்பார்க்கப்படும் HIT 3 திரைப்படம் வருகிற மே 1ம் தேதி திரையரங்கில் வெளிவரும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

நாம் தமிழர் கட்சி பிஜேபி ‘பி’ டீம் தான் - கட்சியில் இருந்து விலகிய நாதக நிர்வாகி குமுறல் IBC Tamilnadu
