8 நாட்களில் 3BHK திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
3BHK
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் இயக்குநர்களில் ஒருவர் ஸ்ரீ கணேஷ். 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் வெற்றி இயக்குநராக அறிமுகமானார். இதை தொடர்ந்து குருதி ஆட்டம் எனும் படத்தை இயக்கினார்.
இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை. இதன்பின், இவர் இயக்கத்தில் வெளிவந்துள்ள திரைப்படம்தான் 3BHK.
மிடில் க்ளாஸ் மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில் சரத்குமார், சித்தார்த். தேவயானி, மீதா ரகுநாத் ஆகியோர் நடித்திருந்தனர். கடந்த வாரம் திரைக்கு வந்த 3BHK திரைப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
வசூல் விவரம்
இந்த நிலையில் 8 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிசில் கடந்திருக்கும் 3BHK படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, உலகளவில் 3BHK திரைப்படம் 8 நாட்களில் ரூ. 9 கோடி வசூல் செய்துள்ளது.

ரயில் விபத்தில் 3 மாணவர்கள் பலி; உண்மை காரணம் என்ன? கேட் கீப்பர் அதிர்ச்சி வாக்குமூலம் IBC Tamilnadu
