3BHK படம் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க
3BHK
8 தோட்டாக்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் ஸ்ரீகணேஷ். முதல் படத்திலேயே மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இவர் இயக்கத்தில் அடுத்ததாக குருதி ஆட்டம் எனும் படம் வெளிவந்தது. ஆனால், இப்படம் தோல்வியை சந்தித்தது.
இதை தொடர்ந்து ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் உருவாகி வெளிவந்துள்ள திரைப்படம்தான் 3BHK. யதார்த்தமான கதைக்களத்தில் உருவான இப்படத்தில் சித்தார்த், சரத்குமார், தேவயானி, மீதா ரகுநாத் ஆகியோர் நடித்திருந்தனர்.
வசூல்
விமர்சன ரீதியாக இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில், 11 நாட்களை காத்திருக்கும் 3BHK திரைப்படம் உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படம் 11 நாட்களில் உலகளவில் ரூ. 14 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் எப்படி இருக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri
