தமிழ் சினிமாவின் அடுத்த பீல் குட் மூவி '3BHK' ரிலீஸ் எப்போது தெரியுமா! அதிகாரப்பூர்வ அறிவிப்பு
3BHK
2025ம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு சிறப்பான ஆண்டாக இதுவரை அமைந்துள்ளது. ஆக்ஷன் திரைப்படங்கள் ஒரு பக்கம் கலைக்கட்டினாலும், பீல் குட் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
டிராகன், குடும்பஸ்தன், டூரிஸ்ட் பேமிலி ஆகிய திரைப்படங்கள் மக்களின் மனதில் இடம்பிடித்தது. அந்த வரிசையில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் திரைப்படம் 3BHK.

இயக்குநர் ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சித்தார்த் கதாநாயகனாக நடித்துள்ளார். சரத்குமார், தேவயானி, மீதா ரகுநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த ஆண்டு பெரிதும் எதிர்பார்ப்பில் உள்ள திரைப்படங்களில் இதுவும் ஒன்றாகும்.
ரிலீஸ் தேதி
இந்த நிலையில், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் 3BHK திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதன்படி, 3BHK படம் வருகிற ஜூலை 4ம் தேதி திரையரங்கில் வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan
Bigg Boss: Bigg Boss: உங்கள் பயணம் இத்துடன் முடிந்தது... ஒலித்த பிக்பாஸ் குரல்! வெளியேறிய போட்டியாளர்கள் Manithan