லக்கி பாஸ்கர் படத்தால் 4 மாணவர்கள் எடுத்த விபரீத முடிவு.. பெற்றோர்கள் வேதனை
லக்கி பாஸ்கர்
மலையாளத்தில் ஹீரோவாக அறிமுகமாகி இன்று பான் இந்தியன் ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார் துல்கர் சல்மான். இவர் நடிப்பில் சமீபத்தில் லக்கி பாஸ்கர் படம் வெளியானது.
தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்க மீனாட்ஷி சவுத்ரி கதாநாயகியாக நடித்திருந்தார். தீபாவளி பண்டிகைக்கு வெளிவந்த இப்படம் மாபெரும் வெற்றியடைந்துள்ள நிலையில், முதல் நாளில் இருந்தே வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.
விபரீத முடிவு
இந்நிலையில், இப்படத்தை பார்த்து விட்டு மாணவர்கள் சிலர் தங்கள் விடுதியிலிருந்து தப்பி ஓடி உள்ளனர் என புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
விசாகப்பட்டினத்தில் உள்ள மகாரணிப்பேட்டையில் தனியார் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படிக்கும் 4 மாணவர்களான சரண் தேஜா, ரகு, கார்த்திக், கிரண் குமார் படத்தின் கதாநாயகன் போல் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று கூறி விடுதியிலிருந்து வெளியேறும் விபரீத முடிவை எடுத்திருக்கிறார்கள்.
இதனால், போலீஸில் மாணவர்களின் பெற்றோர்கள் புகார் கொடுத்துள்ளனர். தற்போது, காவல்துறையினர் மாணவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.