Unknown Facts: நடிகர் கமல் ஹாசனை வெளியே பலருக்கும் தெரியாத 5 உண்மைகள்..

By Karthick Raja Nov 07, 2026 03:55 AM GMT
Report

Unknown Facts of kamal haasan: நடிகர் கமல் ஹாசனை பற்றி வெளியே பலருக்கும் தெரியாத 5 உண்மைகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இன்று கமலின் பிறந்தநாள் என்பதால் திரை பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், கமல் ஹாசனின் 5 Unknown Facts குறித்த தகவலை இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

பாக்ஸ் ஆபிஸ்: சீன் திரைப்படத்தின் முதல் நாள் வசூல்

பாக்ஸ் ஆபிஸ்: சீன் திரைப்படத்தின் முதல் நாள் வசூல்

கமல் ஹாசன்

65 ஆண்டுகளாக சினிமாவில் பயணித்து வரும், இல்லை இல்லை, தனது வாழ்க்கையையே சினிமாவிற்கு கொடுத்திருக்கும் நடிகர் கமல் ஹாசன் தற்போது அரசியலில் களமிறங்கி ராஜ்ய சபா MP ஆகியுள்ளார். இன்று கமல் ஹாசனின் 72-வது பிறந்தநாள். திரை பிரபலங்கள், அரசியல்வாதிகள் மற்றும் ரசிகர்கள் என பலரும் சமூக வலைத்தளங்கள் மூலம் இவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். மேலும், கமல் ஹாசனின் புதிய திரைப்படமான 'சண்டியர்' போஸ்டர் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியாகியுள்ளது.

Unknown Facts: நடிகர் கமல் ஹாசனை வெளியே பலருக்கும் தெரியாத 5 உண்மைகள்.. | 5 Unknown Facts Of Kamal Haasan

இந்த நிலையில், கலையுலகில் பல்வேறு சாதனைகளை படைத்த கமல் ஹாசனை பற்றி வெளியே பலருக்கும் தெரியாத 5 உண்மைகள் பற்றி தகவல் வெளியாகியுள்ளது. அதனை ஒன்றின் பின் ஒன்றாக வரிசையாக இந்த பதிவில் பார்ப்போம்.

வெளியே பலருக்கும் தெரியாத 5 உண்மைகள் 

 1. கமல் ஹாசன் நடிக்க வந்தபோது அவருக்கு 5 வயது. முதல் படம் அவர் நடித்தது களத்தூர் கண்ணம்மா. இப்படத்தில் அவருடைய நடிப்பிற்கு நாடு முழுவதும் பாராட்டுகள் குவிந்தன. மேலும், சிறந்த குழந்தை நட்சத்திரமாக ஜனாதிபதி கையால் கமல் ஹாசனுக்கு தங்க பதக்கம் வழங்கப்பட்டது. இந்தியாவில், அறிமுகமான முதல் படத்திலேயே குழந்தை நட்சத்திரமாக தங்க பதக்கம் வென்ற ஒரே நபர் கமல் மட்டுமே.

Unknown Facts: நடிகர் கமல் ஹாசனை வெளியே பலருக்கும் தெரியாத 5 உண்மைகள்.. | 5 Unknown Facts Of Kamal Haasan

2. இந்திய திரையுலகிலேயே முதல் முறையாக ஒரு படத்தில் நடிப்பதற்காக ரூ. 1 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்கிய முதல் நடிகர் என்கிற பெருமை கமல் ஹாசனுக்கு சேரும்.

Unknown Facts: நடிகர் கமல் ஹாசனை வெளியே பலருக்கும் தெரியாத 5 உண்மைகள்.. | 5 Unknown Facts Of Kamal Haasan

3. நடிகர்கள் பொதுவாக உடல் உறுப்பு தானம் செய்வது இல்லை. ஆனால், கமல் ஹாசன் தனது உடல் உறுப்பு தானத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். தனது மறைவுக்கு பின் தனது உடல் உறுப்புகளை சென்னை மருத்துவமனைக்கு தானமாக வழங்குவதாக உறுதி செய்தார்.

Unknown Facts: நடிகர் கமல் ஹாசனை வெளியே பலருக்கும் தெரியாத 5 உண்மைகள்.. | 5 Unknown Facts Of Kamal Haasan

4. நடிப்பிற்காக கமல் ஹாசன் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட விருதுகளை வென்று குவித்துள்ளார். மேலும், பட்டங்கள், பாராட்டுகளும் கிடைத்துள்ளன. சிறந்த நடிகருக்கான விருதை அவர் ஏராளமான முறை பெற்றுள்ளார். இதில், பிலிம்பேர் மட்டுமே 19 முறை கமல் ஹாசனுக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்துள்ளது.

Unknown Facts: நடிகர் கமல் ஹாசனை வெளியே பலருக்கும் தெரியாத 5 உண்மைகள்.. | 5 Unknown Facts Of Kamal Haasan

5. நடிப்பை தவிர ஒளிப்பதிவு, இசை, பாடல், இயக்கம், திரைக்கதை எழுதுவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களிலும் கமல் ஹாசன் கைதேர்ந்தவர் என்பதை உலகம் அறியும். ஆனால், கமல் ஹாசன் ஒப்பனை கலையை கற்றுக்கொள்ள ஹாலிவுட் ஒப்பனை கலைஞரிடம் பணிபுரிந்துள்ளார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

ஹாலிவுட்டில் அகாடமி விருது பெற்ற ஒப்பனை கலைஞர் மைக்கேல் வெஸ்ட்மோரிடம் புரோஸ்தெடிக் ஒப்பனை (prosthetic makeup) கலையை கற்றுள்ளார். இதற்காக ராம்போ 3, Star Trek போன்ற திரைப்படங்களில் வேலை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Unknown Facts: நடிகர் கமல் ஹாசனை வெளியே பலருக்கும் தெரியாத 5 உண்மைகள்.. | 5 Unknown Facts Of Kamal Haasan

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US