மனதை வருடிய '96 திரைப்படம் வெளிவந்து 6 வருடங்கள்.. படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா
96
விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா இவருடைய திரை வாழ்க்கையிலும் முக்கியமான திரைப்படம் '96. இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் பிரேம் குமார்.
'96 திரைப்படம் கடந்த 2018ஆம் ஆண்டு வெளிவந்த நிலையில், இன்று வரை நம்முடைய மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது. அப்படத்தில் வந்த ரீயூனியன் காட்சி, பள்ளி பருவ காட்சி, த்ரிஷா மற்றும் விஜய் சேதுபதிக்கு இடையிலான பேச்சுவார்த்தை என பல்வேறு விஷயங்கள் ரசிக்க வைத்தது.
பழைய நினைவுகளை நமக்கு மீண்டும் திரையில் காட்டிய '96 திரைப்படத்தை ரசிகர்கள் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடினார்கள்.
96 படத்தின் வசூல்
இந்த நிலையில், '96 திரைப்படம் இன்றுடன் (அக்டோபர் 4) வெளிவந்து 6 வருடங்களை கடந்துள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். 6 வருடங்களை கடந்துள்ள '96 திரைப்படம் உலகளவில் ரூ. 55 கோடிக்கும் மேல் வசூல் செய்து.
96 படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் பிரேம் இயக்கிய திரைப்படம் மெய்யழகன். இப்படம் சமீபத்தில் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உக்ரைன் போர் நிறுத்தம்... பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் கூட்டாக நடவடிக்கை: ஸ்டார்மர் அறிவிப்பு News Lankasri

எனக்கு முன்னாடி 4 பேர்; இந்த வேலைக்கு பேர் என்ன? - நடிகை விஜயலட்சுமிக்கு சீமான் பதிலடி IBC Tamilnadu
