இலங்கையில் இதுவரை விடாமுயற்சி படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ
விடாமுயற்சி
நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து பார்த்து வருகிறோம். உலகளவிலும் சரி, தமிழகத்திலும் சரி இப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.
இந்த நிலையில், அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் இலங்கையில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதை பற்றி பார்க்கலாம் வாங்க.
இலங்கை வசூல் விவரம்
கடந்த 6ம் தேதி வெளிவந்த விடாமுயற்சி படத்திற்கு இலங்கையில் சிறந்த வரவேற்பு கிடைத்து வருகிறது. முதல் நாளில் இருந்தே அங்கு வசூலில் பட்டைய கிளப்பி வரும் இப்படம், இதுவரை இலங்கை மதிப்பில் ரூ. 6 கோடி வசூல் செய்துள்ளது.
இந்திய மதிப்பில் ரூ. 1.73 கோடி வசூலை விடாமுயற்சி படம் ஈட்டியுள்ளது. இது இப்படத்திற்கு கிடைத்துள்ள சிறந்த வசூல் என்றும், இதன்மூலம் குட் பேட் அக்லி படத்திற்கு மாபெரும் ஓப்பனிங் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.