டிராகன் படத்தின் பட்ஜெட் எவ்வளவு தெரியுமா.. உண்மையை கூறிய படத்தின் இயக்குநர்
டிராகன்
இன்றைய தமிழ் சினிமாவில் முக்கிய இளம் ஹீரோக்களில் ஒருவராக பிரதீப் ரங்கநாதன் பார்க்கப்படுகிறார். கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான இவர், லவ் டுடே படத்தில் ஹீரோவாகவும் களமிறங்கி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.
இப்படம் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து, மாபெரும் லாபத்தை தயாரிப்பு நிறுவனத்திற்கு கொடுத்தது. இதை தொடர்ந்து இவர் நடிப்பில் உருவாகி, வருகிற 21ம் தேதி ரிலீஸாகும் திரைப்படம்தான் டிராகன். இப்படத்தை இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கியுள்ளார்.
ஓ மை கடவுளே படத்திற்கு பின் இவர் இயக்கும், இப்படம் ரசிகர்களிடையே பெரிதும் எதிர்பார்ப்பில் உள்ளது. இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.
படத்தின் பட்ஜெட்
இந்த நிலையில், டிராகன் படத்தின் பட்ஜெட் குறித்து உண்மை தகவலை இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து கூறியுள்ளார். இப்படத்தின் ப்ரோமோஷன் பேட்டியில் பேசிய இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, டிராகன் படத்தின் மொத்த பட்ஜெட் ரூ. 37 கோடி என கூறினார். மேலும், சொன்ன பட்ஜெட்டில் படத்தை சரியாக எடுத்துக்கொடுத்துவிட்டேன் என்றும் அவர் தெரிவித்தார்.
இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளனர். மேலும் அனுபமா பரமேஸ்வரன், கயடு லோகர், கவுதம் மேனன், மிஸ்கின், ஜார்ஜ் மரியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.